சியான் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் தான் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் 12 வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக கோப்ரா படக்குழு குழுவினர் அனைவரும் ரஷ்யா சென்றுள்ளனர். இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.
ஆகையால் படப்பிடிப்பிற்காக இரண்டு வாரம் ரஷ்யா சென்ற இர்பான் பதான் படப்பிடிப்பை முழுவதும் முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
இந்தப் படத்தில் இர்பான் பதான், பிரஞ்சு இன்டர்போல் அதிகாரியாக ‘அஸ்லான் எல்மாஸ்’ என்ற கேரக்டரில் நடிக்கின்றார் என்ற சீக்ரெட்டான தகவலை ஏற்கனவே படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளனர்.
அதைப்போல் கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் விரைவில் சியான் விக்ரமின் ‘கோப்ரா’ ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் விக்ரமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது.
அதை கண்டிப்பாக கோப்ரா படம் சரி செய்யும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கண்டிப்பாக கோப்ரா படம் விக்ரமுக்கு செம கம்பாக் படமாக இருக்க போகிறது என்பது மட்டும் உறுதி.