திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நான் விஜய்யோட ஃபேன், நெகட்டிவா ஏதும் போடாதீங்க.. தீக்காயம் அடைந்த சிறுவனின் அம்மா பேட்டி

Thalapathy Vijay: தளபதி விஜய் இன்று தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட விஷ சாராயம் மரணங்கள் காரணமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் அறிவுறுத்தி இருந்தார்.

அதையும் மீறி பற்றி நிர்வாகிகள் நிறைய ஏற்பாடுகள் செய்திருந்தனர். இப்போது அதுவே விஜய் பெரிய சங்கடமாக மாறி இருக்கிறது. நீலாங்கரை பகுதியில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒரு சிறுவனை வைத்து சாகச நிகழ்வுகள் செய்திருக்கிறார்கள்.

ஓடுகளை அடக்கி அதன் மீது நெருப்பு வைத்து அதை கைகளால் உடைப்பது. அப்போது அந்த சிறுவன் ஓடுகளை உடைத்த பிறகும் அவன் கையில் நெருப்பு எரிந்தது. கைகளில் பெட்ரோல் பட்டதால் நெருப்பு அணையாமல் இருந்தது.

அந்த சிறுவன் வலியால் துடிக்க சுற்றி இருந்தவர்கள் அந்த நெருப்பை அணைத்து அந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள். இந்த வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகியதோடு விஜய்க்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது.

தீக்காயம் அடைந்த சிறுவனின் அம்மா பேட்டி

தற்போது அந்த சிறுவனின் தாய் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இதேபோன்று நெருப்பு எரியும் ஓடுகளை கைகளால் உடைக்கும் நிகழ்வை பலமுறை அந்த சிறுவன் செய்திருக்கிறான். அதற்காக வாங்கிய விருதுகளையும் அந்த பையனின் அம்மா காட்டி இருக்கிறார்.

நிறைய பாதுகாப்புடன் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது, இது துரதிஷ்டவசமாக நடந்து விட்டது. என் பையன் எத்தனையோ சாதனைகளை செய்து இருக்கிறான் அதுபோன்ற வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிருங்கள்.

தயவுசெய்து இந்த வீடியோவை பகிராதீர்கள். நான் தீவிரமான விஜய் ரசிகை, என் ஆசைக்காகத்தான் என் பையன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டான் என அந்த சிறுவனை அம்மா மனமுருக பேசியிருக்கிறார்.

தளபதி பிறந்தநாள் ஸ்பெஷல்

Trending News