வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக் பாஸ் 6-க்கு உறுதியான முதல் இரண்டு பிரபலங்கள்.. வாய்ப்புக் கொடுத்து வம்பு இழுக்கும் விஜய் டிவி

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து 6வது சீசன் துவங்குவதற்கு தயாராகி உள்ளது. இதை கமல்ஹாசன் மற்றும் சிம்பு இருவரும் இணைந்து தொகுத்து வழங்கப் போகிறார்கள்.

பிக்பாஸ் 6 சீசனில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்களையும் தொகுத்து வழங்கிய பிரபலமான தொகுப்பாளர் ரக்சன் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சீசன்களில் விஜய் டிவி மூலம் பிரபலமான கவின், ரியோ, ராஜீ ஜெயமோகன் போன்றவர்களைப் போல இவருக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

மேலும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறி வருகின்றனர். இதுவரைக்கும் பிக்பாஸில் கிராமத்தில் இருக்கும் பெண்களை அழைத்து வருவது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் நடவடிக்கை உடை பிடிக்காமல் போக பிறகு அதனை அவர்கள் விமர்சித்து கெட்ட பேரு வாங்கிக்கொள்வார்கள்.

கடந்த சீசனில் தாமரைச்செல்வி தெருக்கூத்து கலைஞராக பிக்பாஸில் என்ட்ரி கொடுத்து பிரபலமானாலும், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விதம் பலரது விமர்சனத்தைப் பெற்றது. அதே ஸ்டேட்டஜியை ஒவ்வொருமுறையும் விஜய் டிவி பின்பற்றுவதால் இந்த முறை கிராமிய பாடகி ராஜலட்சுமியை தெரிந்தெடுத்து இருக்கின்றனர்.

ராஜலட்சுமி கிராமத்தில் இருக்கக் கூடியவர். இவர் சேலையைத் தான் அதிகம் விரும்பி கட்டுவார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் மாடல் பெண்களும் இருப்பார்கள் கடைசியில் இவர் அவர்களை விமர்சிப்பார். அது பிரச்சனையாக மாறும் பின்பு பிக் பாஸ் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

இதனால்தான் ராஜலட்சுமி விஜய் டிவி அழைத்துள்ளதாக கூறுகின்றனர். எனவே 6வது சீசனில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது இனி வரும் நாட்களில் தகவல் வெளியாகும். இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 6 துவங்கப் போகிறது.

Trending News