வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மகாராஜா படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ.. நேரம் கூடி வருகையில் விஜய் சேதுபதி கொடுத்த ட்விஸ்ட

Maharaja Flim: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் மகாராஜா. சரியான மாஸ் ஹிட் கொடுத்து அவர் கேரியருக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குனர் நித்திலன் சாமிநாதன். ஆவரேஜ் கதையை எப்படி திரைக்கதையில் மெருகேற்றி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

இயக்குனர் நித்திலன் குரங்கு பொம்மை என்ற படத்தை 2017 ஆம் ஆண்டு எடுத்தார். அதன் பிறகு அவரின் இரண்டாவது படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதியை நம்பியே இவ்வளவு காலம் ஓட்டிவிட்டார்.

இந்த கதையை விஜய் சேதுபதி இடம் கூறி 6 வருடங்கள் ஆகிறதாம். விஜய் சேதுபதி அன்றைய காலகட்டத்தில் படு பிஸியாக இருந்துள்ளார். அவரை மனதில் வைத்து எழுதிய கதை தான் மகாராஜா. இப்படி விஜய் சேதுபதி கால் சீட் கிடைக்காமல் இவ்வளவு நாட்கள் டிலே ஆகியுள்ளது.

நேரம் கூடி வருகையில் விஜய் சேதுபதி கொடுத்த ட்விஸ்ட

இடையில் நித்திலன் விஜய் ஆண்டனியை வைத்து இந்த படத்தை பண்ணலாம் என அவரிடம் இந்த கதையை சொல்லி சம்மதம் வாங்கி விட்டார். விஜய் ஆண்டனிக்கும் கதை பிடித்துப் போகவே தயாரிப்பாளரிடம் அனுப்பியுள்ளார். ஆனால் அதுவும் சற்று தாமதமாக, இந்த ப்ராஜெக்ட் இழுவையில் இருந்துள்ளது. தயாரிப்பாளர் தரப்பு யோசிக்கையில் விஜய் ஆண்டனி எவ்வளவோ முட்டுக்கொடுத்தும் இந்த படம் கைமீறி போய் உள்ளது.

விஜய் ஆண்டனிக்கு எல்லாம் கூடி வரும் நேரத்தில் பிசியான வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் விஜய் சேதுபதி வந்துவிட்டார். இதனால் நிம்மதி அடைந்த நித்திலன் நான் இந்த கதையை முதலில் விஜய் சேதுபதியை வைத்து தான் திட்டம் போட்டேன் என்று கூறி விஜய் ஆண்டனிக்கு டிமிக்கி கொடுத்து விட்டார்.

Trending News