தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்தினம். 1995ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா போன்ற பிரபலங்கள் நடிப்பில் உருவானது தான் பம்பாய் திரைப்படம்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை மிக முக்கிய காரணமாக இருந்தது. இந்து மற்றும் முஸ்லிம் மதங்களுக்கு இடையே மும்பையில் நடக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வெளிவந்த இந்தப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் அரவிந்த்சாமி நடிப்பதற்கு முன்னதாக முதலில் சியான் விக்ரமிடம் பேசி உள்ளனர். ஆனால் அவர் விளம்பரத்தில் நடித்து வந்த காலகட்டம் அதில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இந்தப்படத்தில் வாய்ப்பை வேண்டாம் என்று உதறி விட்டாராம். இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றி படத்தை வேண்டாம் என்று ஒதுக்கியதை தற்போது வரை வருத்தப்பட்டு தான் வருகிறார் விக்ரம்.
இதில் நடித்திருந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் ஒரு மிக பெரிய அங்கீகாரம் சேது படத்தில் நடிப்பதற்கு முன்பே கிடைத்திருக்கும். விக்ரம் நடிக்க மறுத்ததால் அரவிந்த் சாமியை ஹீரோவாகப் போட்டு மிகப்பெரிய வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
![vikram-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/04/vikram-cinemapettai.jpg)