புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரிலீசுக்கு முன்பே பதான் சாதனையை முறியடித்த ஜவான்.. முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் வசூல் ரிப்போர்ட்

Jawan Advance Collection Report: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ஜவான் நாளை வெளிவர இருக்கிறது. ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் தற்போது அட்வான்ஸ் புக்கிங்கிலும் பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

அதன்படி ஷாருக்கான் தன்னுடைய முந்தைய படமான பதான் சாதனையை ஜவான் மூலம் முறியடித்து காட்டி இருக்கிறார். எப்படி என்றால் தற்போது இப்படத்தின் முதல் நாள் டிக்கெட் புக்கிங் வசூல் மட்டுமே 51.17 கோடியாக இருக்கிறது. இது ஒட்டு மொத்த பாலிவுட் திரை உலகையும் கொஞ்சம் மிரட்டித் தான் இருக்கிறது.

Also read: ஷாருக்கானின் சில்மிஷத்தால் 4 வருடங்களாக இழுத்தடித்த ஜவான் படம்.. அட்லீயை வச்சு செய்த சூப்பர் ஸ்டார்

அந்த வகையில் இந்தியாவில் மட்டுமே ஜவான் டிக்கெட் புக்கிங் 32.47 கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறது. அதை தொடர்ந்து உலக அளவில் 18.70 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. ஆக மொத்தம் அரை சதம் அடித்து கெத்து காட்டி இருக்கிறார் ஷாருக்கான்.

மேலும் அவருடைய பதான் முதல் நாள் ஓப்பனிங் வசூலாக 32 கோடிகளை வசூலித்திருந்தது. அதை ஓவர் டேக் செய்திருக்கும் ஜவான் ரிலீஸ் ஆன பிறகு எந்த அளவுக்கு வசூல் வேட்டை நடத்தும் என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர். ஏற்கனவே பாடல்கள், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் ஆவலை தூண்டிக் கொண்டிருக்கிறது.

Also read: பணத்தாசையில் நயன்தாரா எடுத்த விபரீத முடிவு.. ஜவான் ரிலீஸ் நேரத்தில் இப்படி ஒரு சம்பவமா என ஷாக்கான அட்லீ?

அது மட்டுமல்லாமல் ட்ரெய்லரில் விஜய் சேதுபதியின் தோற்றமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் ஷாருக்கானின் சொந்த படம் என்பதால் அவர் பல வழிகளில் பிரமோஷன் செய்து இப்போதே வசூலுக்கு அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட இவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்த போட்டோக்களும், வீடியோக்களும் மீடியாவை கலக்கியது. இவ்வாறாக ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் திருப்பி இருக்கும் ஜவான் எந்த அளவுக்கு வசூலை வாரி குவிக்கும் என்பதை நாம் விரைவில் தெரிந்து கொள்ளலாம்.

Also read: விஜய்யை கழட்டிவிட்டு கமலுக்கு கொக்கிப்போடும் அட்லீ.. ஜவான் ரிலீசுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அலப்பறை

Trending News