திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டிடி ரிட்டன்ஸ் சந்தானத்துக்கு வொர்க் அவுட் ஆனதா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ரிப்போர்ட்

DD Returns: சந்தானம் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டன்ஸ் படம் நேற்று வெளியானது. சுரபி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இப்படம் ஹாரர் காமெடி கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு இரண்டு பாகங்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மூன்றாவது பாகமாக வெளியாகி இருக்கும் இப்படமும் பயங்கர காமெடி அலப்பறையாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Also read: சந்தானம் பேயுடன் போடும் காமெடி ஆட்டம்.. டிடி ரிட்டன்ஸ் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

தன் காதலியின் பிரச்சனையை தீர்ப்பதற்காக வரும் சந்தானம் பேயிடம் சிக்கிக் கொள்வதும், அதைத் தொடர்ந்து நடக்கும் கேம் என கலாட்டாவாக இப்படம் செல்கிறது. அதில் அவர் வழக்கம் போல பேய்க்கு தண்ணி காட்டும் காட்சிகள் அனைத்தும் வேற லெவலில் இருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தானத்தை இப்படி ஒரு அவதாரத்தில் பார்த்துள்ளதாக பாராட்டி வரும் ரசிகர்கள் படம் முழுவதும் காமெடிக்கு பஞ்சம் இல்லை என பாசிட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர். இதுவே படத்திற்கு நல்ல ஓப்பனிங்காக அமைந்த நிலையில் வசூலும் ஏறுமுகமாகவே இருக்கிறது.

Also read: சக நடிகர்களை தூக்கி விட்டு அழகு பார்த்த 5 ஹீரோக்கள்.. சிம்புவிற்கு நிகராக போட்டி போடும் சந்தானம்

அதன்படி டிடி ரிட்டன்ஸ் முதல் நாளிலேயே 2.8 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. சந்தானத்திற்கு கடந்த சில திரைப்படங்கள் தோல்வியை கொடுத்த நிலையில் அதை ஈடு கட்டும் வகையில் இருக்கிறது இப்படத்தின் வசூல். இது படகுழுவையும் குஷிப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் இந்த பேய் கான்செப்ட் சந்தானத்திற்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதனாலேயே தற்போது தியேட்டர்களில் இப்படத்திற்கான ரசிகர்களின் வருகையும் கணிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் வார இறுதி நாள் என்பதாலும் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: முட்டி மோதியும் பிரயோஜனம் இல்ல.. பழைய ரூட்டுக்கு திரும்ப கதையை உருட்டும் சந்தானம்

Trending News