திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

1500 தியேட்டர்களில் வெளியான ருத்ரன்.. கல்லா கட்டியதா.? முதல் நாள் வசூல் இதுதான்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு ருத்ரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு இப்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்காகவே கடந்த சில நாட்களாக ராகவா லாரன்ஸ் படு பிஸியாக ப்ரமோஷன் செய்து வந்தார்.

அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இப்படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. கதிரேசன் இயக்கத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் உலகெங்கும் 1500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியானது.

Also read: 4 வருட இடைவெளியை சரி கட்டினாரா ராகவா லாரன்ஸ்.? ருத்ரன் படம் எப்படி இருக்கு.? விமர்சனம்

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் ட்ரெய்லரும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து நேற்று வெளியான இப்படத்தை பார்ப்பதற்காக பலரும் ஆர்வத்துடன் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர். அந்த வகையில் படத்தில் சில குறைகள் இருந்தாலும் ரசிக்கும் படி இருப்பதாக ஆடியன்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் வழக்கமாக துள்ளலுடன் நடிப்பை வெளிப்படுத்தும் லாரன்ஸ் இப்படத்தில் இன்னும் மெருகேறி இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரியா பவானி சங்கர் அவருக்கு பொருத்தமான ஹீரோயினாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Also read: ருத்ரன் படத்தை ஓட வைக்க கொட்டிக் கொடுக்கும் லாரன்ஸ்.. புது சர்ச்சையில் சிக்கிய மாஸ்டர்

அந்த வகையில் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 5 கோடியை தாண்டி வசூலித்திருக்கிறது. அதாவது தமிழகத்தில் இப்படம் 3.2 கோடியையும் ஆந்திராவில் 1.75 கோடியையும் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது அதை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் லாபகரமான வசூலை பார்த்துள்ளது.

அதாவது கர்நாடகாவில் 35 லட்சமும், கேரளாவில் 6 லட்சமும் வசூலித்துள்ள ருத்ரன் வெளிநாடுகளில் 40 லட்சம் வரை வசூலித்து இருக்கிறது. இதையெல்லாம் சேர்த்து உலக அளவில் ருத்ரன் திரைப்படத்திற்கு முதல் நாளிலேயே 5.75 கோடி வசூல் கிடைத்திருக்கிறது. இது வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: அசுரத்தனமாக அவதாரம் எடுத்துள்ள லாரன்ஸ்.. ரிலீஸ் தேதியுடன் மிரட்டும் ருத்ரன் ஃபர்ஸ்ட் லுக்

Trending News