செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

எல்ஜிஎம் படத்தின் முதல் நாள் வசூல்.. கல்லா கட்டினாரா தோனி

LGM First Day Collection: தோனியின் மனைவி சாக்ஷி தயாரிப்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் எல்ஜிஎம் படம் உருவாகி இருந்தது. நேற்று கிட்டத்தட்ட 6 படங்கள் வெளியான நிலையில் எல்ஜிஎம் படமும் ரிலீஸாகி இருந்தது. ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு மற்றும் நதியா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

சாக்லேட் பாயாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் இந்த படத்திலும் ஐடி வேலை பார்க்கும் இளைஞனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லவ் டுடே கதாநாயகி இவானா நடித்திருந்தார். மேலும் நடிகை நதியா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருந்தது.

Also Read : கருப்பு பணத்தை மாற்ற இப்படி எல்லாம் செய்யலாமா தல.. தோனியை கழுவி ஊற்றிய பயில்வான்

ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக எம்ஜிஎம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதாவது மாமியார் மற்றும் மருமகள் இருவரும் திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கான்செப்டில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இது புதுமையான விஷயம் என்றாலும் கதைகளம் மிகவும் மெதுவாக சென்றது.

அதோடு மட்டுமல்லாமல் கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ஆகையால் ரசிகர்களை கவர எல்ஜிஎம் படம் தவறிவிட்டது. இந்த சூழலில் இப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் வெளியாகி இருக்கிறது. முன்பதிவிலேயே நல்ல கல்லா கட்டிய இப்படம் முதல் நாள் வசூலிலும் கோடிகளை குவித்து இருக்கிறது.

Also Read : சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஆசையில் தோனி.. இப்ப வரை விஜய் பச்சை கொடி காட்டாததற்கு காரணம்

அதாவது தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் முதல் படமான எல்ஜிஎம் 1.5 கோடி வசூல் செய்துள்ளது. ஆனாலும் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்து நாட்களில் வசூல் பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எல்ஜிஎம் படத்திற்கு போட்டியாக சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் படம் வெளியானது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆகையால் எல்ஜிஎம் படத்தின் வசூல் குறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் தோனி அடுத்த முறையாவது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படங்களை தயாரித்தால் நிச்சயம் பெரிய அளவில் கல்லா கட்டலாம் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : தோனிக்கு நம்ம சினிமா கற்றுக் கொடுக்கும் பாடம்.. சிஎஸ்கேவை மனதில் வைத்து தல ஆடும் ஆட்டம்

Trending News