வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜிவி பிரகாஷை வச்சு நசுக்கிய ஜெயிலர்.. அடியே படத்திற்கு போட்ட காசை எடுக்க முடியாமல் திணறும் முதல் நாள் கலெக்ஷன்

Adiyae First Day Collection: இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இப்போது அடியே என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் நேற்று திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தை மன்வி மூவி மேக்கர் தயாரித்திருந்தது. மேலும் ஐஸ்டீன் பிரபாகரன் இசையமைத்துள்ள நிலையில் கௌரி, மிர்சி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அடியே படத்தில் நடித்திருந்தனர். ஒரு டைம் லூப்பை வைத்து காதல் படமாக இந்த படத்தை எடுத்திருந்தனர்.

Also Read : வெங்கட் பிரபவை வைத்து ஜிவி பிரகாஷ் உருட்டும் அடியே ட்ரெய்லர்.. அடுத்த சயின்ஸ் பிக்சன் கதை ரெடி

வித்யாசமான கதைக்களம் என்றாலும் ரசிகர்களை இப்படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இதன் காரணமாக முதல் நாள் வசூலே பெரிய அடி வாங்கி இருக்கிறது. மேலும் இப்படத்தை 8 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பாளர் எடுத்திருந்தார். ஆனால் முதல் நாள் வசூலே எதிர்பார்த்த அளவு வசூல் இல்லாமல் மோசமாக அமைந்துள்ளது.

அதாவது வெறும் 48 லட்சம் மட்டும் தான் இப்படம் வசூல் செய்திருக்கிறது. இதற்குக் காரணம் படம் ஓரளவு சுமார் தான் என்றாலும் மற்றொரு புறம் ரஜினியின் ஜெயிலர் படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படம் 20 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா திரையரங்குமே ஹவுஸ்புல் ஆக தான் இருக்கிறது.

Also Read : 525 கோடியை தாண்டிய ஜெயிலர் வசூல்.. கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடிய முத்துவேல் பாண்டியனின் புகைப்படம்

ஆகையால் இப்போது புதிதாக வெளியாகும் படங்கள் பெரிய அளவில் போகாத நிலையில் ஜிவி பிரகாஷின் படமும் இதே நிலைமையை சந்தித்திருக்கிறது. சமீபகாலமாக இவரது படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால் இப்போது நடிப்பை காட்டிலும் நிறைய படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்போது அடியே படத்தின் கலெக்ஷனை பார்க்கும்போது ரசிகர்கள் இனி ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராகவே பணியை தொடரலாம் என்று கருத்தை தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் இப்போது அடியே தயாரிப்பாளர் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க இருப்பது இப்போதே கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது.

Also Read : ஜெயிலர் கலெக்ஷனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.. இரண்டே வாரத்தில் மொத்த ஆட்டத்தையும் க்ளோஸ் செய்த முத்துவேல்

Trending News