வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெயிலர் வேகத்தை குறைத்த குஷி.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

Kushi First Day Collection: நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடத்தில் இருந்த சமந்தா திடீரென இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார். இதற்குக் காரணம் அவருக்கு இருந்த அரியவகை நோய் தான். இதனால் சிகிச்சை பெற்று வந்த சமந்தா அவ்வப்போது சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

மேலும் அந்த படங்கள் வெளியாகியும் சாந்தாவுக்கு பெரிய அளவில் வெற்றி எதுவும் கொடுக்கவில்லை. இந்த சூழலில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி போட்டு சமந்தா நடித்து இருக்கும் படம் தான் குஷி. அதேபோல் விஜய் தேவர கொண்டாவுக்கும் கடந்த ஐந்து வருடங்களாக பெரிய அளவில் எந்த படமும் வெற்றி பெறவில்லை.

Also Read : ஜெயிலர் வெற்றிக்கு காரணமான 2 நடிகர்கள்.. பேராசையில் தலைவர் 170-க்கு கண்டிஷன் போட்ட சூப்பர் ஸ்டார்

ஆகையால் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருக்குமே குஷி படம் முக்கியமான படமாக அமைந்தது. காதல் கலந்த ரொமான்டிக் படமாக வெளியான குஷி படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்தார்கள். அந்த வகையில் முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட் வெளியாகி சமந்தா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது திரையரங்குகளில் ரஜினியின் ஜெயிலர் படம் தான் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருந்தது. கடந்த மூன்று வாரங்களாக பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் ஜெயிலர் படம் வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. அதன்படி தற்போது வரை இப்படம் கிட்டத்தட்ட 600 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

Also Read : உப்பு சப்பு இல்ல, கோவில் கோவிலா போனா மட்டும் படம் ஓடுமா.? விஜய், சமந்தாவின் குஷியை பஞ்சர் செய்த ப்ளூ சட்டை மாறன்

ஆனால் நேற்றைய தினம் நிறைய படங்கள் வெளியானதால் ஜெயிலர் படத்தின் வேகம் குறைய தொடங்கியுள்ளது. இதனால் தான் விரைவில் ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியிட உள்ளனர். மேலும் குஷி படத்தின் வரவேற்பின் காரணமாக ஜெயிலர் அலை ஓய்ந்து இருக்கிறது. அதன்படி குஷி படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 16 கோடி வசூல் செய்திருக்கிறது.

மேலும் தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் சமந்தா கம்பேக் கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் படுபயங்கரமாக செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : Kushi Movie Review- மூச்சு முட்ட காதலிக்கும் விஜய் தேவரகொண்டா-சமந்தா.. குஷி எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Trending News