ஒரு படத்தின் முதல் நாள் வசூலை வைத்தே அப்படம் வெற்றியா அல்லது தோல்வியா என்பதை கணிப்பார்கள். முதல் நாள் ஒரு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொருத்தே அப்படம் திரையரங்குகளில் ஓடும் நாட்கள் நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில் நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் படம் சாதனை படைத்து விட்டது.
இரண்டு வருடங்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற சூழலில் தான் டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியானது.
இதனால் இப்படத்தின் வசூல் எப்படி இருக்குமோ என படக்குழுவினர் அச்சத்தில் இருந்தனர். இருப்பினும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் டாக்டர் படம் முதல் நாள் மட்டும் சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாம். கொரோனா பிரச்சனைக்கு பின்னர் திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாக டாக்டர் படம் பார்க்கப்படுகிறது.
டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை என பல வகைகளில் நல்ல தொகைக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மட்டும் டாக்டர் படத்தின் தயாரிப்பாளருக்கு சுமார் 12 கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்ததாம். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூலும் அதிகமாக இருப்பதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே பல பிரச்சனைகளில் இருக்கும் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை மிகவும் நம்பினார். ஆனால் அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. இப்படம் மட்டும் தோல்வி அடைந்திருந்தால் நிச்சயம் சிவகார்த்திகேயன் மேலும் பிரச்சனையில் சிக்கி இருப்பார். ஆனால் அப்படி நடக்காமல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு நாள் கால கட்டத்திற்குப் பின் இது வரை வந்த படங்களில் டாக்டர் பட்டம் அதிக வசூல் ஈட்டி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளார் சிவகார்த்திகேயன் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.