கொரோனோ அச்சுறுத்தலால் ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டாலும் மக்களை திரையரங்கிற்கு வர ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தற்போது மாஸ் ஹீரோவான தளபதி விஜய்யின் மாஸ்டர் படம், பண்டிகை அன்று ரிலீஸ் செய்யப்பட்டதால், தளபதி ரசிகர்கள் அதிகாலை முதலே தியேட்டர்களில் அலை மோதுகின்றனர்.
எனவே ரசிகர்களின் பேரார்வத்தால் தமிழகத்தில் மட்டும் ஒரே நாளில் ரூபாய் 23 கோடியை வசூல் செய்துள்ளது. இதைப்போன்று அண்டை மாநிலங்களான கர்நாடகத்திலும், கேரளாவிலும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்தது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 6 கோடியை வசூல் செய்துள்ளது.
இருப்பினும் தமிழக அரசு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் தளபதி ரசிகர்களின் அதிக ஆர்வத்தினாலே, கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி அளித்தது.
ஆகையால் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் ஒரே நாளில் இவ்வளவு அதிக வசூலை தட்டிச்சென்றது கோலிவுட் வட்டாரமே வாயடைத்துப் போய்விட்டது.