பொதுவாக தற்போது வெளி வருகிற படங்கள் முக்கால்வாசி வெளிநாடு சென்று அங்கே படப்பிடிப்பை நடத்தி வருவார்கள். இது டிரெண்டாகவே மாறிப்போச்சு. இங்க தடுக்கி விழுந்தா அடுத்த சூட் வெளிநாடு தான் அப்படிங்கற மாதிரி நிலைமை போயிட்டு இருக்கு. ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னதாகவே அதாவது 53 வருடங்களுக்கு முன் எம்ஜிஆர், சிவாஜி வெளிநாடுகளில் படப்பிடிப்பை வைத்திருக்கிறார்கள்.
அதுவும் அந்த காலத்தில் வெளிநாட்டுக்கு போவது என்பது மிகப் பெரிய அபூர்வம். அப்படிப்பட்ட காலத்தில் மொத்த படத்தையும் அங்கே வைத்து சூட்டிங் எடுத்திருக்கிறார்கள். அது என்ன படங்கள் என்று ஒரு தொகுப்பாக இங்கே பார்க்கலாம். முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம் தான் சிவந்த மண். இப்படத்தின் ஹீரோவாக சிவாஜி கணேசன் நடித்தார்.
Also read: எம்ஜிஆர் முதல் அம்பி வரை.. பாக்கியலட்சுமி கோபி கலக்கிய விதவித கெட்டப்
இப்படம் தான் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட முதல் படம். அப்படி எந்த வெளிநாடு என்றால் பிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்து. அதன்பின் சிவாஜி உடைய படம் வெளிநாட்டில் எடுத்த மாதிரி என்னுடைய படமும் அங்கே எடுக்க வேண்டும் என்ற முடிவுடன் எம்ஜிஆர் இருந்தார்.
இது எல்லா காலத்திலும் இருக்கிற போட்டிகள் தான். ஏன் இப்பொழுது கூட இரு நடிகர்களுக்கு இடையே எல்லா விதத்திலும் போட்டி நிலவி தான் வருகிறது. அதே மாதிரி அந்த காலத்திலும் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் இவர்களுக்கு இடையே போட்டி இருப்பது சாதாரணம்தான்.
Also read: எம்.ஜி.ஆரை விட பெரிய வள்ளல் இவர்தான்.. உண்மையிலேயே கர்ணனாக வாழ்ந்த நடிகர்
அதனால் சிவாஜி சிவந்த கண் படத்தை எடுத்தது போல், எம்ஜிஆரும் அவருடைய படத்தை ஜப்பானில் படபிடிப்பை வைத்தார். அப்படி எடுத்த படம் தான் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன். இப்படம் 1973 இல் வெளியானது இது 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது.
மேலும் இப்படத்திற்காக வெளிநாடு போகும்போது எம்ஜிஆர் இப்படத்தில் நடிக்கும் சக நடிகர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இப்படி வெளிநாடுகளில் சென்று படப்பிடிப்பை நடத்துவது அந்தக் காலத்தில் மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்.
Also read: தமிழ் சினிமாவின் 6 பெரும் தலைகள் நடித்த ‘ஏ’ படம்.. நம்ப முடியாத சிவாஜியின் படம்