திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இந்த வருட முதல் பாதியில் வசூலை அள்ளிய டாப் 5 படங்கள்.. கேஜிஎஃப்-ஐ ஓரம் கட்டிய லோகேஷ்

2022 ஆம் ஆண்டின் அரை பாதி இன்றுடன் நிறைவடைந்தால், இந்த அரையாண்டில் வெளியான திரைப்படங்களில் எந்த படம் பாக்ஸ் ஆபீஸில் டாப் 5 இடத்தைப் பிடித்திருக்கிறது என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் நான்கு வருடங்களுக்குப் பின்பு திரையில் தோன்றிய கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டில் வெளியான மற்ற படங்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஜூன் 3-ம் தேதி திரையிடப்பட்ட விக்ரம் திரைப்படம், ரிலீஸ் ஆன நாள் முதல் தற்போது வரை ரசிகர்களிடம் எந்தவித நெகட்டிவ் கமெண்ட்களையும் பெறாமல் சர்வதேச அளவில் 400 கோடிக்கு கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடி இருக்கிறது.

தற்போது வரை தமிழகத்தில் லோகேஷின் விக்ரம் 170 கோடி வசூலை ஈட்டி குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து பிரஷந்த் நீல் இயக்கத்தில் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ், நடிப்பில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் சர்வதேச அளவில் 1250 கோடி வசூல் ஆகி தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய படத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது.

இதை தொடர்ந்து மூன்றாவது இடம் தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் பிடித்திருக்கிறது. தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி திரைக்கு வந்த வலிமை தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் வரிசையில் 4-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

இதேபோல் 5-ம் இடத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் பெற்றிருக்கிறது. மேலும் சென்னையில் மட்டும் 2022 ஆம் ஆண்டின் அரையாண்டில் வெளியான படங்களில் டாப் 5 பட்டியலும் வெளியாகியிருக்கிறது. இதிலும் விக்ரம் திரைப்படம் தான் முதலிடத்தையும் கேஜிஎஃப் 2 இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறது.

3-ம் இடம் தமிழகத்தை போன்றே சென்னையிலும் தளபதி விஜயின் பீஸ்ட் , அதைத் தொடர்ந்து 4-வது இடம் வலிமை போன்ற படங்கள் பெற்றிருக்கிறது. ஆனால் ஐந்தாமிடத்தில் மட்டும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் சென்னையில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் வரிசையில் 5-ம் இடத்தைப் பெற்றிருக்கிறது.

இவ்வாறு சென்னை மற்றும் தமிழகத்தை பொறுத்தவரை இந்த அரை ஆண்டில் லோகேஷ் இயக்கிய விக்ரம் படம் தான் கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்து மாஸ் காட்டுகிறது. விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் வேற லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறது. விக்ரமை தொடர்ந்து லோகேஷ் தளபதியின் 67-வது படத்தை இயக்கியிருக்கிறார். அதைத்தொடர்ந்து கமலஹாசனுடன் மீண்டும் விக்ரம் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். எனவே இந்த இரண்டு படங்களின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Trending News