புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரீ என்ட்ரியில் ஜித்தன் ரமேஷ் மிரட்டும் ரூட் நம்பர்:17.. கொடூரமான மூஞ்சியுடன் வெளிவந்த போஸ்டர்

Route no 17 : ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக ஆரம்பத்தில் நடித்த நிலையில் அவரால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது. அவரது தம்பி ஜீவா அதன் பிறகு வந்தாலும் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துக் கொண்டார். மீண்டும் ஜித்தன் ரமேஷ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் பெரிதாக ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை. இப்போது ரூட் நம்பர் 17 என்ற படத்தில் நடித்திருக்கிறார். நேநி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அபிலாஷ் ஜி தேவன் இயக்கியிருக்கிறார். மேலும் ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக அஞ்சு பாண்டியா நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் கதை 90 காலகட்டத்தில் தொடங்கி 2020 வரை ஏற்படும் நிகழ்வு ஆகும். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இ ங்குன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகி பலருக்கும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஜித்தன் ரமேஷா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு கொடூரமாக இருக்கிறார்.

Also Read : விஜய்க்கு வராத சங்கம் ஏன் த்ரிஷாவுக்கு மட்டும் வராங்க.? மன்சூருக்காக குரல் கொடுத்த சீமான்

அதுவும் முகத்தில் ஒரு புறம் முழுவதும் தழும்புகளாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் கிட்டத்தட்ட மூன்று கெட்டப்புகளில் நடித்திருக்கிறாராம். ஆகையால் கண்டிப்பாக சினிமாவில் சாதித்து காட்ட வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இறங்கி இருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.

ரீ என்ட்ரியில் ஜித்தன் ரமேஷ் மிரட்டும் ரூட் நம்பர்:17

route-no-16
route-no-17

Trending News