திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மல்டி ஸ்டார் படங்களுக்கு அன்றே பிள்ளையார் சுழி போட்ட நடிகர்.. 200 நாட்கள் மேல் ஓடிய படம்

மல்டி ஸ்டார் படங்கள் என்றாலே எப்போதும் பிரமாண்டமாகவும், ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க தோன்ற வகையிலும் இருக்கும். அதற்கான காரணம் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என எல்லா மொழிகளிருந்தும் வரும் நடிகர்கள் தமிழில் எப்படி நடிக்கிறார்கள் என்பதை பார்க்கும் ஆவலுக்கு தான். இப்படி மல்டி ஸ்டார்களை வைத்து படம் பண்ணும்போது அந்த நடிகர்களுக்கும் எல்லா மொழிகளிலும் மார்க்கெட் அதிகரிக்கும்.

அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் ஹிந்தி நடிகரான நவாஸுதீன் சித்திக்கும், மலையாள நடிகரான பாபி சிம்ஹா உள்ளிட்டோர் களமிறங்கி நடித்தனர். இப்படம் சூப்பர்ஹிட்டானதை அடுத்து, உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் நடித்தனர்.

Also Read: வரிசையாக கதை கேட்கும் ரஜினிகாந்த்.. அடுத்த படத்தை இயக்க காத்திருக்கும் 5 இயக்குனர்கள்

அண்மையில் விஜயின் நடிப்பில் வெளியான வாரிசு படம் சக்கைப்போடு போட்டது. அப்படத்தில் கூட தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். இப்படி தொடர்ந்து மல்டி ஸ்டார் படங்கள் இந்திய சினிமாவில் உருவாகி கொண்டிருக்கும் வேளையில், இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட இந்தியாவின் முதல் மல்டிஸ்டார் திரைப்படத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

நடிப்பு என்ற பெயர் சொன்னாலே எல்லோரின் ஞாபகத்துக்கு வரும் முகம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிவாஜியின் பெரும்பாலான படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய படமாகும். சாகும் வரை சிவாஜி கணேசன் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்தவர். இவரது நடிப்பில் 1958 ஆம் ஆண்டு வெளியான படம் தான் சம்பூர்ண ராமாயணம்.

Also Read: இந்த 5 படங்களுக்கு 5/5 ரேட்டிங் வாங்கிய சிவாஜி கணேசன்.. எல்லா படமும் வித்தியாசமான கெட்டப்

எழுத்தாளர் வால்மிகி எழுதிய கம்பராமாயணத்தை மையமாக வைத்து இயற்றப்பட்ட இப்படத்தை இயக்குனர் சோமு இயக்கினார். ராமரின் பிறப்பு முதல் அவரது பட்டாபிஷேகம் வரை உள்ளான கதைக்களத்தில் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 250 நாட்களை கடந்து திரையில் ஓடிய படமாகும். இதில் ராமராக தெலுங்கு நடிகர் என்.டி.ராமா ராவும், சீதையாக பத்மினியும் நடித்திருப்பர்.

முக்கியமான கதாபாத்திரமான பரதன் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்து அசத்தியிருப்பார். மேலும் இப்படத்தில் எஸ் வி ரங்காராவ்,நரசிம்ம பாரதி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பர். 1960 ஆம் ஆண்டு ராமாயண் என்ற பெயரில் இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பது. இது தான் இந்திய சினிமாவிலேயே முதன் முதலில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் எடுக்கப்பட்ட முதல் மல்டி ஸ்டார் படமாகும்.

Also Read: 275 படங்களில் நடித்து சிவாஜி கணேசன் இயக்கிய ஒரே வெற்றி படம்.. டைட்டிலே தெறிக்குது.!

Trending News