விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பள்ளிக்கு சென்ற இனியா, பள்ளி முடிந்த பிறகும் ஒரு மணி நேரம் கழித்து வந்ததால் பதறிப் போகிறார் பாக்யா. அதன்பிறகு கோபியுடன் ஸ்கூலில் இருந்து சென்றிருக்கிறார் என்பது தெரிந்தது.
இருப்பினும் ஒரு வார்த்தை சொல்லி விட்டு சென்றிருக்கலாம் என பாக்யா இனியாவை திட்டும் நேரத்தில், செழியன் மற்றும் மாமியார் ஈஸ்வரி இருவரும் இனியாவிற்கு சாதகமாக பேசுகின்றனர். இந்த சமயத்தில் இனியாவை தான் விரட்ட வேண்டும்.
Also Read: பிபி ஜோடியில் கப்பு ஜெயிச்சாலும் தீராத மன வேதனையில் சுஜா வருணி.. வருத்தத்தில் குடும்பம்
ஆனால் அதற்கு மாறாக இனியாவிற்கு சப்போர்ட்டாக பேசி, பாக்யாவை திட்டுகின்றனர். ஏனென்றால் கோபியை வீட்டை விட்டு வெளியேற்றி பிள்ளைகளிடமிருந்து அப்பாவை பிரித்ததாக குடும்பமே சேர்ந்து மனசாட்சி இல்லாமல் திட்டுகிறது.
இதனால் மனம் கலக்கம் அடைந்த பாக்யா, கோபி செய்த தவறை அனைவரும் மறந்து விட்டார்களே என கலங்குகிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஆறுதலாக, பெரிய திருமண மண்டபத்தில் சமைத்துக் கொடுக்கும் ஆர்டருக்கு அப்ளை செய்திருந்த பாக்யாவை இன்டர்வியூக்கு வரும்படி அழைப்பு வந்தது.
Also Read: இனியாவை வைத்து டபுள் கேம் ஆடும் கோபி.. பாக்கியாவுக்கு பிடித்த பைத்தியம்
இதனால் விவாகரத்துக்கு பிறகு பாக்யா வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என, தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். மறுநாள் காலை மாமனாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு கல்யாண ஆர்டரை எடுப்பதற்காக செல்கிறார்.
அந்த நேர்காணலில் பாக்யா சிறப்பாக செயல்பட்டு, அந்த ஆர்டர் அவருக்கு கிடைக்கிறது. டைவர்ஸ் ஆன பிறகு பாக்யாவிற்கு ஆறுதலாக கேட்டரிங் தொழில் தான் கை கொடுக்கப் போகிறது. இதன் பிறகு பெரிய தொழிலதிபராக மாறப்போகும் பாக்யாவை கூடிய விரைவில் அவருடைய பிள்ளைகள் புரிந்து கொள்ளும் நேரம் வரும்.
Also Read: ஸ்கூல் பீஸ், இபி பில் என ஒரு வாரமா வச்சு செய்யும் பாக்யா.. சுயமரியாதை காப்பாற்ற எடுத்த சவால்