முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை துறை புதிய ரெக்கார்டு ஒன்றை பதிவு செய்துள்ளது. இதுவரைக்கும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவே பண வர்த்தனை நடத்தப்பட்டு வந்தது.
ஆனால் பல வாகனங்கள் சுங்கச்சாவடி கட்டணத்தை நேரடியாக செலுத்தி வந்தனர். இதற்கு ஆப்பு வைக்கும் வகையில் இனிமேல் நேரடியாக பணம் செலுத்த கூடாது என அரசாங்கம் கட்டாய விதி ஒன்று விதித்தது. இனிமேல் எந்த வாகனமும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை மக்களுக்கு நல்லது செய்வது போல் அரசு இந்த நடைமுறையை அறிவித்தது.
இதனை பார்த்த அரசாங்கம் இனிமேல் நேரடியாக பணம் செலுத்துவதற்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது. அதனால் பலரும் Fast-tag முறைக்கு மாறினர்.
இதன் மூலம் பிப்ரவரி 16 நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டண முறை மட்டுமே செயல்படும் என அரசாங்கம் அறிவித்தது. இதையடுத்து 4 நாட்களில் 23% அதிகமாக சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் அளித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் கடந்த வார இறுதியில் மட்டும் 102 கோடியை தொட்டது. இதுவரை இல்லாத வசூல் சாதனை படைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. விட்டா டாஸ்மாக் வசூலை மிஞ்சிடும் போல, மேலும் அதிகார பூர்வ வர்த்தனை பற்றிய முழு தகவல் வருவதற்கு இன்னும் 2 நாட்களாகும்.
அதனால் உண்மை கட்டணத்தை குறைத்து செல்ல வாய்ப்பு இல்லாததால் கண்டிப்பாக இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கும். ஆனால் ஃபாஸ்டேக் பொருத்தவரை அதிக அளவில் வாகனம் எங்கும் நிற்கத் தேவையில்லை, அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்னதாக வசூலிக்கப்பட்ட தொகையை விட சற்று குறைவாகத்தான் இருக்குமாம். இதனால் இதனுடைய முழுப் பயனை மக்கள் பெற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.