தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் ஒருவராக இருந்து வரும் பிரசாந்த் வர்மா, முதன் பெண் சூப்பர் ஹீரோ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு பிரசாந்த் திரைக்கதை எழுத பூஜா அபர்ணா கொல்லுரு இயக்குகிறார்.
இவர் கடந்த ஆண்டில் வெளியான அரசியல் நய்யாண்டி படமான மார்டீன் லூதர் கிங் படத்தை இயக்கியுள்ளார்.இந்த நிலையில் இவர் முதன் முதலாக ஒரு பெண் சூப்பர்ஹீரோ படத்தை இயக்கவுள்ளார். அதை மிகுந்த பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும், மக்களிடம் அறிவித்துள்ளார்.
அவர் எடுக்க போகும், அடுத்தபடம் மகாகாளி. பிவிசியூ என்று அழைக்கப்படும் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்சில் அங்கம் வகிக்கும் இந்த படத்தின் கான்செப்ட் விடியோவும் பகிரப்பட்டுள்ளது. இதில் படத்தின் கேரக்டர்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் பிவிசியூ யுனிவர்சில் முதல் சூப்பர் பெண் சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது.
பெண் சூப்பர்ஹீரோவாக மாறிய காளி தேவி
தீமையை மிகக் கடுமையாக அழிப்பவளான காளி தேவியின் உருவகமாக படம் உருவாக இருக்கிறது. இந்த நவராத்திரியில், ஒரு பெண் சூப்பர் ஹீரோ எப்படி இருக்க முடியும் என்பதை காட்ட உள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இது மரியாதைக்குரிய காளி தேவியின் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சித்தரிப்பைக் கொண்டிருக்கும். இந்திய சினிமாவில் ஒரே மாதிரியானவற்றை உடைத்து சினிமாக்களின் தரத்தை மறுவரையறை செய்யும்.” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த படம் ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே, ஹனுமான் படத்தை எடுத்துள்ளார். அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற இரண்டாம் பாகத்தையும் எடுக்க உள்ளார். இந்த நிலையில், பெண்களை கவுரவிக்கும் வகையில், பெண் சூப்பர்ஹீரோ படத்தை எடுத்து அசத்த இருக்கிறார். இவருக்கு ஏராளமான நெட்டிசன்ஸ் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.