ஆரம்பத்தில் திணறி பிரம்மாண்ட வளர்ச்சிபெற்ற 5 நடிகர்கள்.. இன்றுவரை ஜெயிக்க துடிக்கும் ஜெயம் ரவி, சிம்பு!

சினிமாவில் நுழையும்போது எப்படிப்பட்ட நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உடனே ரசிகர்கள் உருவாக்குவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஐந்து பிரபலங்கள் தட்டுத்தடுமாறி ஒவ்வொரு படங்களிலும் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது வளர்ச்சி பெற்று நடிகர்களாக மாறி இருக்கின்றனர்.

சூர்யா: என்னதான் சூர்யாவின் அப்பா சிவக்குமார் நடிகர்களாக இருந்தாலும், வாரிசு நடிகராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த சூர்யாவின் ஆரம்பத்துல படங்களான நேருக்குநேர், காதலே நிம்மதி, சந்திப்போமா போன்ற படங்களில் இரண்டாம் கதாநாயகனாகவும் சில படங்களில் முன்னணி நடிகராகவும் நடித்தாலும் அவருக்கு ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் விடா முயற்சியை கைவிடாது சூர்யா, பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படத்திற்கு பிறகு காக்க காக்க, பிதாமகன், கஜினி, சிங்கம் 1,2,3, ஏழாம் அறிவு, சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் என தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக் காட்டி தற்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் ஜொலிக்கிறார்.

சிவகார்த்திகேயன்: எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய திறமையை மூலதனமாக பயன்படுத்தி பாண்டியராஜன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் எல்லாம் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் துவண்டுபோகாத சிவகார்த்திகேயன், அதன்பிறகு நடித்த எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே சமீபத்தில் 100 கோடி வசூலை குவித்த டாக்டர், டான் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகர்களுக்கு கடும் போட்டியாக மாறி உள்ளார்.

விஜய் சேதுபதி: இவர் ஆரம்பகால சினிமா பயணத்தை தொலைக்காட்சியின் வாயிலாகவே துவங்கி, அதன் பிறகு வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து, பின்பு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும் போன்ற வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தில் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.ஹீரோக்களில் இப்பொழுது ரொம்ப பிசியாக இருப்பது விஜய் சேதுபதி தான். கிட்டத்தட்ட வருடத்திற்கு ஏழெட்டுப் படங்களை அசால்டாக ரிலீஸ் செய்கிறார்.  இவர் தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

விக்ரம்: இவரும் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் நுழைந்து ஆரம்பத்தில் கதாநாயகர்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்த விக்ரம், 1999 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான சேது திரைப்படம் இவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு அந்நியன், சாமி1,2, பிதாமகன், ஐ போன்ற படங்களில் எல்லாம் இவருடைய வித்தியாச வித்தியாசமான கெட்டப் மற்றும் இவரின் கடின உழைப்பு அவரை வெற்றியின் உச்சத்துக்கே கொண்டு சேர்த்தது.

தனுஷ்: தயாரிப்பாளரின் மகனாகவும், இயக்குனரின் தம்பியாகவும் சினிமாவில் எளிதாக நுழைந்தாலும் அவருடைய ஆரம்பகால படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்தது. இருப்பினும் விடாமுயற்சியை கைவிடாத தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான திருடா திருடி படத்திற்கு பிறகு சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மாரி1,2, அசுரன், கர்ணன் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது பாலிவுட் வரை கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்.

ஆகையால் இந்த ஐந்து கதாநாயகர்களும் தோல்வியை தொடர்ந்து சந்தித்தாலும் துவண்டு போகாமல் ஆரம்பத்தில் திணறி பிறகு ,பிரம்மாண்ட வளர்ச்சி பெற்று தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இடம்பெற்றிருக்கின்றனர். இருப்பினும் இவர்களைப் போல் தற்போது வரை சிம்பு மற்றும் ஜெயம் ரவி இருவரும் இன்னும் அவர்கள் விரும்பிய இடத்தை அடைய முடியாமல் ஜெயிக்க தவித்துக் கொண்டிருக்கின்றனர்.