Five Bollywood actresses who acted in lesser number of films in Tamil cinema: தமிழ் சினிமாவில் பாலிவுட்டில் இருந்து இறக்குமதியாகும் நடிகைகளுக்கு தமிழ் நடிகைகளை விட எப்போதுமே மவுசு அதிகம் தான். ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் காளையர்களின் கனவு கன்னியாக போற்றப்படுபவர்கள் பெரும்பாலும் பாலிவுட் நடிகைகளே ஆவார்கள். அவ்வாறாக தமிழகத்தில் புயலென வீசிப்போன 5 நடிகைகளை காணலாம்.
காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தபு. 90ஸ் காலகட்டத்தில் “எனை காணவில்லையே நேற்றோடு!” என்று தபு நினைவாகவே இருந்தனர் நம் தமிழ் சிங்கங்கள். தெலுங்கு மலையாளம் கன்னடம் போஜ்புரி என பல மொழிகளிலும் நடிக்கும் தபு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அஜித்தின் ஏகே 63 யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
“வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா” என்று நிலவுக்கே கட்டளை இட்ட இந்த காந்த கண்ணழகி கஜோல், ராஜுவ் மேனனின் மின்சாரகனவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சினிமாவில் கிட்டதட்ட கால் நூற்றாண்டுகளை நிறைவு செய்த பின்னும் இன்றும் இளமையாக தோற்றமளிக்கும் கஜோல், தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கம்பேக் கொடுத்து 90ஸ் கிட்ஸ்சை மிரள செய்தார்.
Also read: இணையத்தில் மட்டமான வேலை செய்த கஜோல்.. பட விளம்பரத்திற்காக இப்படியெல்லாமா செய்வீங்க?
கே எஸ் ரவிக்குமாரின் லிங்கா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. கிராமத்தில் வாழும் துடுப்பு மிக்க பெண்ணாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்திருந்தார் சோனாக்ஷி. காளையர்கள் விரும்பும் கன்னியாக புகழ் பெற்ற சோனாக்ஷி அதன்பின் தமிழ் படங்களில் நடிக்காமல் போனாலும் இவரது பாலிவுட் படங்களின் பாடல்கள் மூலம் தங்களை ஆறுதல் படுத்திக் கொண்டனர் தமிழ் ரசிகர்கள் .
2000 ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் இன்றுவரை தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா .
இந்தியாவில் இருந்து பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தை பெற்ற முதல் பெண் சுஷ்மிதா சென். இவர் 1994 ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற “பெமினா மிஸ் இந்தியா” போட்டியில் ஐஸ்வர்யாராயை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை தக்க வைத்தார். இவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தாலும் தமிழில் நடித்த ரட்சகன் திரைப்படமே இவரை சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. மேலும் முதல்வன் திரைப்படத்தில் “ஷகலக்க பேபி” என்ற ஒரு பாடலுக்கு மட்டும் தோன்றி தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி போனார் சுஷ்மிதா சென்.
Also read: ஐஸ்வர்யாராய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த 5 படங்கள்.. அஜித்துடன் ஜோடியாக நடிக்க மறுத்த படம்