சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கூட பிறந்த உடன்பிறப்புகளின் தோல்வியை தாங்க முடியாத 5  பிரபலங்கள்.. அஜித் கூட நடித்தும் அட்ரஸ் இல்லாம போன தம்பி

Five celebrities in Tamil cinema who can’t bear the failure of their brothers: நடைமுறை வாழ்வில் முன்னேற்றத்தில் மேலோங்கி இருக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கு பின் இருக்கும் தனது சாம்ராஜ்யத்தை தன் வாரிசுகள் ஆள வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். இதற்கு சினிமா என்ன விதிவிலக்கா?  சினிமா துறையில் வெற்றியை ருசித்த நடிகர்கள் பலரின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் ஒரு பக்கம் ஜொலித்தாலும் ஒரு பக்கம் அட்ரஸ் இல்லாமல் காணாமல்  போன 6 பிரபலங்களை பற்றிய பதிவு இது,

ஜீவா- ஜித்தன் ரமேஷ்: தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் வாரிசுகளான ஜீவா, தனது தனித்துவமான நடிப்பில் ஜொலித்த போதும் இவரின் உடன்பிறப்பு ஜித்தன் ரமேஷ்க்கு சரியான படங்கள் அமையாததால் ஜொலிக்க முடியாமல் போனதுடன் பிக்பாஸில் கலந்து கொண்டு காணாமலும் போய்விட்டார். 

ஆர்யா-சத்யா: அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா, “நான் கடவுள்”,”மதராசபட்டினம்” போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகருக்கான விருதை வென்று உள்ளார். இவருடைய தம்பி சத்யா அமர காவியம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான போதும்  தொடர்ந்து இவருடைய படங்கள் தோல்வியை தழுவின. மேலும் அமீரின் இயக்கத்தினல் ஆர்யா மற்றும் சத்யா இணைந்த “சந்தனதேவன்” படமும் பாதியிலேயே கைவிடப்பட்டது. 

Also read: சிம்புவை தூக்கி எறிந்த கமல்.. STR க்கு திருப்பி அடிக்கும் கர்மா..!

சிம்பு- குறளரசன்: டி ராஜேந்திரரின் வாரிசுகளான இவர்கள் இருவரும் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிம்பு இன்று வரை உச்சத்தில் இருக்க, குறளரசனோ சில தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே வந்து நடிப்புக்கு முழுக்கு போட்டு போய்விட்டார். 

வெங்கட் பிரபு-பிரேம்ஜி: கங்கை அமரனின் வாரிசுகள் என அடையாளப்படுத்திக் கொண்ட வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவரும் சினி துறையில் இன்று வரை சர்வே பண்ணி வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்குனராக ஜொலித்து விட பிரேம்ஜி நடிகராகவும் காமெடி நடிகராகவும் அவ்வப்போது வந்து அலப்பறை பண்ணி விட்டுப் போகிறார். 

லாரன்ஸ்- எல்வின்: தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அதிக வருடங்கள் பயணித்த போதும்  ராகவா லாரன்ஸ்க்கு பேய் சப்ஜெக்ட்டை முதலாக கொண்ட திரில்லர் படங்களே கை கொடுத்தது. லாரன்ஸ் இன் தம்பி எல்வின் காஞ்சனா 2 படத்தில் அண்ணன் கூட பாடல்களுக்கும் சில காட்சிகளுக்கும் வந்து  மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு சென்று விட்டார். 

சிறுத்தை சிவா-பாலா: அஜித்தின் பேவரைட் இயக்குனர் என்பதற்கிணங்க அஜித்குமாருடன் நாலு படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய இயக்குனர் சிறுத்தை சிவா அவர்களின் தம்பி பாலா, அஜித்துடன் வீரம் திரைப்படத்தில் தம்பியாக நடித்திருந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளின் நடித்திருந்தாலும் சொல்லிக் கொள்ளும் படியாக முன்னணி கதாபாத்திரங்கள் அமையாததாலும் உடல் நிலையில் ஏற்பட்ட  பாதிப்பாலும் திரைத்துறையைவிட்டு ஒதுங்கி உள்ளார் பாலா.

Also read: தறி கெட்டவர்களை தெறித்து ஓட செய்யும் அஜித்.. விடாமுயற்சியால் ஏற்பட போகும் மாற்றம்

Trending News