வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோவை கைவிட்ட 5 முக்கிய பிரபலங்கள்.. வெற்றி விழாவில் கலந்து கொள்ளாமல் எஸ்கேப் ஆன சம்பவம்

Leo Success Meet: எந்த நேரத்தில் லியோ படம் ஆரம்பித்ததோ அப்பதிலிருந்து இப்போது வரை ஒவ்வொரு பிரச்சினையாக வந்து கொண்டே இருக்கிறது. பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே எங்க இருந்துதான் சர்ச்சைகள் வரும் என்று தெரியாத அளவிற்கு நாளா பக்கமும் பிரச்சனைகள் சூழ்ந்து வரும். அப்படித்தான் லியோ படத்திலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்தது.

இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த விஷயம் என்னவென்றால் இசை வெளியீட்டு விழாவை தான். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. ஒரு வழியாக அதெல்லாம் சரி கட்டி லியோ படத்தை ரிலீஸ் பண்ணி விட்டார்கள். அதன் வாயிலாக இன்று வரை கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூலை பெற்றிருக்கிறது.

இதை கொண்டாடும் விதமாக இன்று லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொதுவாக ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் அந்த நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். அதிலும் இப்படம் LCU கதை சம்பந்தமாக இருப்பதால் இது சம்பந்தப்பட்ட நடிகர்களான சூர்யா, கமல், கார்த்தி, விஜய் சேதுபதி மற்றும் லோகேஷ் தயாரிக்க இருக்கும் தலைவர் 171 படத்தின் ஹீரோ ரஜினியும் கலந்து கொள்வார் என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்தார்கள்.

Also read: ரஜினியின் அடுத்த பட சம்பளம் வெளிவந்தது.. ஆசியாவிலேயே நம்பர் 1 என நிரூபித்த தலைவர்

ஆனால் யாருமே இதில் கலந்து கொள்ளாமல் விஜய் மட்டுமே சக்சஸ் மீட்டிங்கு வந்திருக்கிறார். அத்துடன் லோகேஷ் மற்றும் லலித்குமார் இவர்களை வைத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்னும் சொல்ல போனால் இப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்த த்ரிஷாவுமே கலந்து கொள்ளவில்லை என்பது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

அடுத்ததாக லியோ கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் படத்தின் சீன்கள் கொண்டு வரப்பட்டது. அப்படி இருக்கும் பொழுது இதில் மறைமுகமாக கமல் இருக்கிறார் என்பது உறுதியான விஷயம். இந்த சூழ்நிலையில் கண்டிப்பாக கமல் மட்டுமாவது கலந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கேரளாவில் நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சியில் மோகன்லால் மட்டும் மம்முட்டியுடன் சேர்ந்து அதில் பங்கேற்றிருக்கிறார்.

ஆக மொத்தத்தில் லியோ வெற்றி விழாவை யாருமே கண்டு கொள்ளவில்லை. வழக்கம்போல் விஜய் மட்டுமே ஒன் மேன் ஆர்மியாக வருகிற எல்லா தடங்கலையும் தவிடு பொடியாக்கி தொடர்ந்து வெற்றிப் பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். இந்த ஒரு விஷயம் கண்டிப்பாக அடுத்தடுத்து இவருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருக்கப் போகிறது.

Also read: 24 மணி நேரமும் விஜய் புராணம் தான்.. சல்லி சல்லியாக உடைந்த சைக்கோ இயக்குனரின் மனக்கோட்டை

Trending News