FEFSI: சமீபகாலமாக பெரிய ஹீரோக்கள் செய்யும் விஷயங்கள் இங்கு உள்ள தொழிலாளர்களை பெரிதும் பாதித்து வருகிறது. அதாவது படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்கிறார்கள். இதனால் அங்குள்ள தொழிலாளர்களுக்கு தான் வேலை கிடைக்கிறது. இதனால் சினிமாவை நம்பி இருக்கும் தமிழ் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
அதோட மட்டுமல்லாமல் பெரிய ஹீரோக்கள் மற்ற மொழி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதால் இங்கு உள்ளவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் அதாவது பெப்சி குழு ஒரு அறிக்கை விட்டுள்ளது. அதாவது புதிய ஐந்து கண்டிஷன்களை போட்டுள்ளது.
Also Read : ஊரே பத்திகிட்டு எரியுது உங்களுக்கு என்ன கவலை.. வாயை திறக்காத ரஜினி, கமல், விஜய், அஜித்தால் பெரும் சர்ச்சை
அதன்படி தமிழில் உருவாகும் படங்களில் தமிழ் கலைஞர்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயே படப்பிடிப்பை நடத்த வேண்டும். அவசியம் இல்லாமல் வெளிமாநிலங்களிலோ வெளிநாடுகளிலோ படபிடிப்பை நடத்தக்கூடாது என அறிக்கையில் கூறியுள்ளனர்.
மேலும் அடுத்ததாக ஒரு படத்தின் இயக்குனரே அக்கதையின் எழுத்தாளராக இருந்தால் கதை உரிமத்தில் பிரச்சனை வரும்போது அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இதில் அந்த படத்தின் தயாரிப்பாளரோ, படமோ எவ்வித பாதிப்பும் ஏற்பட்ட விடக்கூடாது என குறி இருக்கின்றனர்.
Also Read : 2 பிள்ளை பெற்ற பிறகு ரஜினிக்கு வந்த காதல்.. அந்த நடிகையை தான் கட்டுவேன் என முரண்டு பிடித்த சூப்பர் ஸ்டார்
இதைத்தொடர்ந்து முதலிலேயே இயக்குனர் சொன்ன பட்ஜெட் மற்றும் நாட்களில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும். ஒருவேளை இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தயாரிப்பு நிர்வாகிகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமுமே திக்கு முக்காடி உள்ளது.
அதாவது ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளிநாட்டில் தான் அதிகம் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இப்போது இந்த அதிரடி அறிவிப்பால் ஒரு கடிவாளம் போட்டது போல் ஆகிவிட்டது. மேலும் இது எல்லாமே தொழிலாளர் நலனுக்காக என்று நினைத்தால் கண்டிப்பாக எல்லாவற்றையும் செய்ய முடியும் என பிரபலங்கள் பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
Also Read : ஒரே ஹிட், வானத்துக்கும் பூமிக்கும் குதித்த விஜய் பட நடிகை.. மொத்தமும் சொதப்பி மூலையில் முடங்கிய சோகம்