சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இந்த லிஸ்டில் இவர்களா? அதிவேக அரை சதங்களை அடித்த 5 இந்திய வீரர்கள்.!

ஒருநாள் போட்டியை பொருத்தவரை அனைத்து வீரர்களுமே ஓரளவு நின்று விளையாடுவதை விரும்புவார்கள். இருந்தாலும் ஒரு சில அதிரடி வீரர்கள் ஒருநாள் போட்டியை கூட 20 ஓவர் போட்டி போல் விளையாடுவார்கள். ஏபி டிவிலியர்ஸ், விரேந்திர சேவாக் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் குறைந்த பந்தில் அதிக ரன்களை குவிப்பார்கள். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த ஐந்து வீரர்களின் விவரம்,

கபில் தேவ்: இந்திய அணி 1983ஆம் வருடம் மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்பொழுது நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கபில்தேவ் 22 பந்துகளுக்கு 50 ரன்கள் விளாசினார். இவரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 282 ரன்கள் குவித்தது. போட்டியின் முடிவில் இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது. இந்த போட்டியில் 38 பந்துகளைச் சந்தித்த கபில் தேவ் 72 ரன்களை குவித்தார்.

Kapildev-Cinemapettai.jpg
Kapildev-Cinemapettai.jpg

விரேந்தர் ஷேவாக்: எதிரணியினரை எப்பொழுதுமே அச்சமூட்டும் வகையில் விளையாடும் சேவாக் 2001-ம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக 22 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 350 ரன்களை குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த கென்யா அணி 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது.

shewag-india

யுவராஜ் சிங்: 2005ஆம் ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிராக இவர் இச்சாதனையை செய்தார். இந்த போட்டியில் யுவராஜ் சிங் 22 பந்துகளில் அரைசதம் அடித்து வங்கதேசம் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இதன் காரணமாக கடைசி 10  ஓவர்களில்  100 ரன்களை குவித்தது இந்திய அணி. மொத்தத்தில் 32 பந்துகளை சந்தித்த யுவராஜ் சிங் 79 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Yuvraj-Cinemapettai.jpg
Yuvraj-Cinemapettai.jpg

ராகுல் டிராவிட்: 2003ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் வீரர்கள் சேவாக் மற்றும் டெண்டுல்கர் மிக அற்புதமாக விளையாடி சதம் குவித்தனர். அதன்பின் 44-வது ஓவரில் களமிறங்கிய ராகுல் டிராவிட் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உதவியுடன் அரைசதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இறுதியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

Rahuldravid-Cinemapettai.jpg
Rahuldravid-Cinemapettai.jpg

அஜித் அகர்கர்: இன்றுவரை ஆச்சரியமாக கருதப்படும் ஒன்று அகர்கர் அடித்த அதிவேக அரைசதம். ஜிம்பாவே அணிக்கு எதிராக 21 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 25 பந்துகளை சந்தித்த அவர் 67 ரன்களை குவித்துள்ளார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அஜித் அகர்கர் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

AjithAgarkar-Cinemapettai.jpg
AjithAgarkar-Cinemapettai.jpg

Trending News