வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

எதிர்நீச்சல் குணசேகரன் தாய் மாமா இத்தனை படங்கள் இயக்கி இருக்கிறாரா.? சாமி கொண்டாடி எடுத்த அடல்ட் மூவி

5 films directed by Ethirneechal serial actor Bharti Kannan: திரையில் இருக்கும் பிரபலங்கள் இப்போது சின்னத்திரைக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் முன்பு நடித்த மாரிமுத்து சினிமாவில் இயக்குனராக இருந்து அதன் பின் நடிகராக அவதாரம் எடுத்தவர். அவருடைய மறைவுக்குப் பிறகு அந்த சீரியல் டல்லடித்தாலும், அவரைப் போன்றே இயக்குனராக இருந்து, இப்போது எதிர்நீச்சல் சீரியலில் பூசாரியாக நடித்து வரும் இயக்குனர் பாரதி கண்ணன் 5 படங்கள் இயக்கி இருக்கிறார். அந்தப் படங்கள் எவை என்பதை பார்ப்போம்.

கண்ணாத்தாள்: நடிகர் கிரண், நடிகை மீனா நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான பக்திப் பரவசமூட்டக்கூடிய திரைப்படமான கண்ணாத்தாள் படத்தை இயக்கியவர், இப்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பாரதி கண்ணன் தான். இவர் இந்த படத்தில் பாபு என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இப்போதும் இல்லத்தரசிகள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தொலைக்காட்சிகளில் போட்டால் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவிற்கு இந்தப் படத்தை பாரதி கண்ணன் கிராமத்துப் பின்னணியில் தெய்வ பக்தி நிறைந்த படமாக எடுத்துள்ளார்.

திருநெல்வேலி: ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் பாரதி கண்ணன் இயக்கிய திருநெல்வேலி திரைப்படத்தில் பிரபு, ரோஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இதில் ஒரு கிராமத்தில் மிகவும் மதிக்கப்படும் மனிதரான துளசி எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையாக இருப்பதற்காக பெயர் பெற்றவர். ஆனால் அவரது நல்ல பண்பு குடும்பத்திற்கு நிறைய பிரச்சனைகளை கொண்டு வரும் போது என்னென்ன சோதனைகள் எல்லாம் வருகிறது என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் கல்லாகட்டி, பாரதி கண்ணனை தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அங்கீகரிக்க வைத்தது.

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் பாரதி கண்ணன் இயக்கிய ஐந்து படங்கள்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி: 2001 ஆம் ஆண்டு பக்தி படமாக வெளியான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திரைப்படம் தான் இன்றும் கோயில் திருவிழாக்களில் திரையிடப்படுகிறது. இதில் இராஜராஜேஸ்வரி அம்மனாக ரம்யா கிருஷ்ணன் கச்சிதமாக பொருந்தி நடித்தார். இவர்களுடன் ராம்கி, சங்கவி, பானுப்பிரியா, வடிவேலு, நிழல்கள் ரவி என திரை பட்டாளமே இணைந்து நடித்தனர். இந்த படத்தின் ஸ்டோரி, வழக்கம்போல் தன்னுடைய பக்தரின் குடும்பத்தை காப்பாற்றக்கூடிய அம்மனின் கதை என்றாலும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திரைப்படம் உணர்வு பூர்வமான படமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இந்த படத்தை இயக்கியது பாரதி கண்ணன் தான்.

ஸ்ரீ பண்ணாரி அம்மன் : தொடர்ந்து பக்தி படங்களை இயக்கிய பாரதி கண்ணனுக்கு ரசிகர்கள் விரும்பக்கூடிய தெய்வீக படத்தை தான் மறுபடியும் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீ பண்ணாரி அம்மன் என்ற படத்தை அடுத்ததாக இயக்கி வெளியிட்டு வழக்கம்போல் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றார். இதில் பண்ணாரி அம்மன் ஆக விஜய் சாந்தி மெய்சிலிர்க்கக்கூடிய நடிப்பு திறனை காட்டினார். இவர்களுடன் கரன், லயா, வடிவேலு உள்ளிட்டோரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் அந்த காலத்தில் விஜயசாந்தியின் ரசிகர்களை ஏமாற்றாத படமாகவும், பக்தி கருபொருளையும் கொண்டதால் இதனை தெலுங்கிலும் ரீமேக் செய்தனர்.

வயசு பசங்க: தொடர்ந்து பக்தி பரவசமூட்ட கூட்டிய படங்களை இயக்கிக் கொண்டிருந்த பாரதி கண்ணன் கொஞ்சம் வித்தியாசமாக இளம் நடிகர்களை வைத்து காதல், கலாட்டா மற்றும் திரில்லர் நிறைந்த படமாக வயசு பசங்க என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இதில் நடித்த பெரும்பாலானோர் அறிமுக நடிகர்களாகத்தான் இருந்தனர். இதில் பாரதி கண்ணன் சாமியாக நடித்தார். இந்த படத்தில் நிறைய கேலி கிண்டல்களும், கெட்ட வார்த்தைகளும் அதிகமாக இருந்ததால் சென்சார் போர்டு இந்த படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் கடைசி 40 நிமிடத்தில் தான் படத்தின் கதையை வாங்கியது அதோடு இதில் கொச்சை நிறைந்த காட்சிகள் அதிகம் இருந்ததால், நிறையவே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

- Advertisement -spot_img

Trending News