புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாலிவுட்டிலும் கொண்டாடப்பட்ட ரஜினியின் 5 படங்கள்.. ஆல் ரவுண்டரான சூப்பர் ஸ்டார்

Rajini : ரஜினிக்கு தற்போது 75 வயதானாலும் ஹீரோவாக அதே எனர்ஜியுடன் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்த வகையில் பாலிவுட்டில் ரஜினி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் பெரிதும் கொண்டாடப்பட்ட ஐந்து படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். ரஜினியின் பெயரில் அதிக வசூல் செய்த 2.0 படம் பாலிவுட்டில் வரவேற்கப்பட்டது.

அதேபோல் இந்த படத்தின் முதல் பாகமான எந்திரன் படமும் வசூல் வேட்டையாடியது. சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாஸ்டர் பீஸ் ஆக அமைந்தது.

பாலிவுட்டில் கொண்டாடப்பட்ட ரஜினியின் ஐந்து படங்கள்

அதேபோல் 2018 இல் வெளியான காலா மற்றும் 2016 இல் வெளியான கபாலி ஆகிய படங்களும் பாலிவுட்டில் அமோக வரவேற்பு பெற்றது. ரஜினியின் கேங்ஸ்டர் கதையை ரசிகர்கள் பெரிதும் விரும்பினர்.

மேலும் ஷங்கரின் மற்றொரு படமான சிவாஜி படம் ரஜினியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த படம் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவான சந்திரமுகி படம் 2005 இல் வெளியானது. இந்த படம் தமிழ் சினிமாவிலேயே ஏகபோக வரவேற்பு பெற்றிருந்தது. திகில் நிறைந்த திரில்லர் படமாக வெளியாகி ரஜினியின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அப்போது அமைந்தது.

Trending News