வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஹீரோ கதையை நம்பி மோசம் போன 5 ஹீரோக்கள்.. விஜய் விக்ரமுக்கும் இதே நிலைமைதான்!

பொதுவாக குழந்தைகளுக்கு சூப்பர் ஹீரோ கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் டாப் ஹீரோக்கள் இந்த கதையில் நடித்து பல்பு வாங்கியுள்ளனர். ஆரம்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இந்த படங்கள் ஏமாற்றத்தை தான் சந்தித்துள்ளது. அவ்வாறு சூப்பர் ஹீரோ கதையை நம்பி மோசம் போன 5 ஹீரோக்களை பார்க்கலாம்.

ஹிப்ஹாப் ஆதி : ஹிப்ஹாப் பாடகராக சினிமாவில் நுழைந்த ஆதி இப்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சரவணன் இயக்கத்தில் இவர் வீரன் என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது.

Also Read : வேல் படத்தை காப்பியடித்த ஹிப்ஹாப் ஆதி.. எதுக்கு தம்பி இந்த வேலை

சிவகார்த்திகேயன் : சிவகார்த்திகேயனின் பல படங்கள் 100 கோடி வசூல் செய்து வரும் நிலையில் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஹீரோ படத்தில் நடித்தார். இந்த படம் அவரது கேரியரில் மிகவும் மோசமான படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி வசூலிலும் பெருத்த அடி வாங்கியது.

ஜீவா : வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஜீவா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முகமூடி என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடித்திருந்தார். இப்படம் நிச்சயம் அவரது திரை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பி இருந்தார். ஆனால் அதற்கு நேர் எதிராக முகமூடி ஜீவாவை காலை வாரிவிட்டது.

Also Read : ஜீவா அப்பாவிடம் பயங்கரமா திட்டு வாங்கின நயன்தாரா.. படப்பிடிப்பு நிற்கும் நிலையில் இருந்த ஈ படம்

விஜய் : உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்க்கும் சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கும் ஆசை இருந்துள்ளது. அதன்படி மோகன் ராஜா இயக்கத்தில் உருவான வேலாயுதம் படத்தில் விஜய் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்ய முடியாமல் திணறியது.

விக்ரம் : விக்ரம் நினைத்துக் கூட பார்க்க முடியாத கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வியக்க வைத்துள்ளார். அந்த வகையில் சுகி கணேசனின் கந்தசாமி படத்தில் விக்ரம் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்படம் நல்ல வசூலை பெரும் என்று எதிர்பார்த்த நிலையில் நடுநிலையான வசூலை மட்டுமே பெற்றிருந்தது.

Also Read : வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதா?. முடியவே முடியாது என ஒத்த காலில் நிற்கும் விக்ரம்

Trending News