சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தீபாவளிக்கு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்யப்பட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த திரைப்படம் படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தோல்வியை தழுவியது. இந்தப் படத்துக்கு போட்டியாக வெளியான சர்தார் படத்தை காட்டிலும் பிரின்ஸ் திரைப்படத்தின் வசூலும் மிகக் குறைவாக இருந்தது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது படத்தின் ஹீரோயின் தான். ஏனென்றால் அவர் இந்த படத்திற்கு செட் ஆகாமல் இருந்தது தான் மிகப்பெரிய மைனஸ் என்று பலரும் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனுக்கு ஓவர் பில்டப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் காமெடி என்ற பெயரில் அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பேசுவது போன்று பேசிக்கொண்டே இருந்ததும் படத்திற்கான பின்னடைவாக அமைந்தது.
Also read:பிரின்ஸ் பட தோல்வியால் மாவீரன் படத்திற்கு என்ன ஆச்சு? பரிதவிக்கும் சிவகார்த்திகேயன்
இப்படி சில பல விஷயங்கள் இருந்தாலும் பெரிய விஷயமாக பார்க்கப்படுவது படத்தின் இயக்குனருக்கு இருந்த அரிய வகை நோய்தான். சமீபத்தில் நடிகை சமந்தாவுக்கு வினோதமான ஒரு நோய் வந்தது பலருக்கும் தெரியும். அவரைப் போன்றே இயக்குனர் அனுதீப்புக்கும் விசித்திரமான ஒரு உடல் பிரச்சினை இருக்கிறது.
அதாவது அவருக்கு ஹை சென்சிடிவ் என்ற அரிய வகை நோய் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காபி குடித்தால் கூட இரு தினங்களுக்கு தூங்க முடியாதாம். அந்த அளவுக்கு உடல் உபாதை ஏற்படுமாம். அது மட்டுமல்லாமல் ஆப்பிள் ஜூஸ் குடித்தால் அது மூளையை சுத்தமாக செயல்படாத அளவுக்கு செய்து விடுமாம்.
அதேபோன்று அதிகபட்ச ஒளி, அதிக எண்ணெயில் செய்த உணவுகள் போன்றவை அவர்களுடைய உடலுக்கு செட் ஆகாது. இதனால் அவர்கள் சாப்பிடுவது உட்பட பல விஷயங்களில் மிகவும் கவனமாகத்தான் இருக்க வேண்டும். இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் அவர்களால் சில நேரங்களில் நம்மை போன்று இயல்பாக சுவாசிக்கக்கூட முடியாதாம்.
இப்படி ஒரு வினோதமான பிரச்சினை இருந்தாலும் கூட அனுதீப் அந்த படத்தை கவனமாகவே இயக்கி இருக்கிறார். இருப்பினும் இந்த திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றி பட குழுவுக்கு படுதோல்வியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கிடுகிடுவென உயரத்தில் இருந்த சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் தற்போது அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
Also read:சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சைக்கோ இயக்குனர்.. கௌதம் மேனனுக்கு டஃப் கொடுப்பார் போல