திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய்யின் அரசியல் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தாரா உதயநிதி.? தளபதி தரப்பில் கூறும் 5 காரணங்கள்

Vijay-Udhayanidhi: இன்றைய தினம் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து என்பதுதான். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் ஒருவராக இருக்கும் விஜய் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என ஒட்டுமொத்த சினிமாவும் ஆச்சரியப்படும் விதமாக அமைந்திருக்கிறது.

இதற்கான காரணம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்படுவது என்னவென்றால் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக அறிவித்துள்ளார். ஆனால் தளபதி விஜய்யின் ரசிகர்கள் தரப்பில் இருந்து லியோ இசை வெளியீட்டு விழா நடக்காததற்கான ஐந்து காரணங்களை முன் வைக்கிறார்கள்.

Also Read : லியோ ஆடியோ லாஞ்சும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.. வெறுத்துப் போய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பட குழு

அதாவது கிரிக்கெட் மேட்ச் மற்றும் அரசியல் தலைவர்களின் மாநாடு போன்ற நேரங்களில் அதிக மக்கள் கூடுகிறார்கள். அதை மட்டும் அரசாங்கம் சமாளித்து அனுமதி கொடுத்து வருகிறது. ஆனால் லியோ ஆடியோ லான்ச் நடக்காததற்கு அரசாங்கம் சூழ்ச்சியால் தடைப்பட்டது எனக் கூறுகிறார்கள்.

அடுத்ததாக சமீபத்தில் ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் போலியான டிக்கெட்டுகள் அதிகம் விற்கப்பட்டு நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டுவிட்டனர். அதுபோன்ற அசம்பாவிதம் லியோ இசை வெளியீட்டு விழாவால் நடந்து விடக்கூடாது என்பதற்காக கூட ரத்து செய்து இருக்கலாம்.

Also Read : லியோவை சுற்றி பின்னப்படும் 5 சதிவலைகள், குழப்பத்தில் விஜய்.. 500 கோடிக்கே திணறும் லோகேஷ்

அடுத்ததாக ரசிகர்கள் தரப்பிலிருந்து கூறப்படும் விஷயம் விஜய் லியோ மேடையில் அரசியல் பற்றி பேசிவிடக் கூடாது என்பதற்காக உதயநிதி மற்றும் அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியால் தான் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடியாமல் செய்திருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள். மேலும் தமிழ் சினிமாவில் முக்கிய படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில் வாரிசு படம் வெளியான போது கூட சென்னையில் முக்கிய இடங்களில் மட்டும் தான் ரெட் ஜெயன்ட் படத்தை விநியோகம் செய்திருந்தது. இப்போது லியோ படத்தின் தமிழ்நாட்டு உரிமையை சென்னையில் உள்ள முக்கிய மூன்று இடங்களில் வெளியிட ரெட் ஜெயிண்ட் கேட்டிருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தை வெளியிட முடிவு செய்ததால் குடைச்சல் கொடுக்கும் விதமாக லியோ ஆடியோ லாஞ்சை நடக்க விடாமல் செய்து இருக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் ஆதங்கத்துடன் பேசி வருகிறார்கள்.

கடைசியாக சினிமா மேடையை அரசியல் மேடையாக மாற்றி விடக்கூடாது என்பதற்காக இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் 2024 நடக்கும் தேர்தலில் விஜய் போட்டியிடுகிறார் என்பதால் தான் அவருடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த விடாமல் செய்து இருக்கிறார்கள்.

Also Read : விஜய்க்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயம்.. லியோ பட ஆடியோ லான்ச்-க்கு தளபதி போட்ட கட்டுப்பாடு

Trending News