புதன்கிழமை, மார்ச் 12, 2025

சிறந்த 5 ஹாலிவுட் ட்ரைலாஜி படங்கள்.. இப்போ ஓடிடியில்ல பார்க்கலாம்

Hollywood Trilogy Movies : ஹாலிவுட் படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் முத்தொகுப்பு படங்கள் உள்ளது‌. அதில் சிறந்த ஐந்து படங்களை இப்போது பார்க்கலாம்.

The Lord of the Rings படம் நட்பு மற்றும் தியாகத்தை வெளிக்கொண்டுவரும் அளவுக்கு சக்தி வாய்ந்த படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதோடு இந்த படம் 11 ஆஸ்கர் விருதையும் பெற்றது.

The Dark Knight படம் ஆக்சன் மற்றும் கிரைம் திரில்லராக எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் சீட்டின் நுனியில் அமரச் செய்தது. மேலும் ஜியோ ஹாட் ஸ்டாரில் இப்போது இந்த படத்தை பார்க்கலாம்.

வியப்பில் ஆழ்த்திய ஐந்து ஹாலிவுட் முத்தொகுப்பு படங்கள்

The Godfather ஹாலிவுட் சினிமாவின் மாஸ்டர் பீஸ் ஆக அமைந்த படம்‌. மாபியா குடும்பத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டும் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ளது ‌

The Matrix படம் சயின்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்டிருந்தது. எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய அறிவியல் சார்ந்த கதையாக எடுக்கப்பட்ட இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது.

Back to the Future படம் சாகசம் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக எடுக்கப்பட்டிருந்தது. மேலும் டைம் டிராவல் வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

Trending News