கடந்த ஊரடங்கில் ரிலிசாகி மாபெரும் வெற்றி கண்ட படம் சூர்யா, அபர்னா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த “சூரரைப்போற்று”.
படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தது அதன் முழு கதையம்சம். இப்படத்தில் ஏழை எளியோரும் எளிதில் பறக்குமாறு விமானத்தின் டிக்கெட் விலையை மாற்றி மாற்று விமான நிறுவனங்களுடன் போட்டியிட்டு அதனை நடத்தியும் காட்டுவார் சூர்யா.
இது போலவே இப்போது இந்தியாவின் பிரபல உள்நாட்டு சேவை விமானங்கள் பலவும் தங்கள் விலையை எதிர்பார்க்காதவாறு குறைத்து வருகின்றன.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்டு பிறகு குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த விமானங்கள் இப்போது சில தினங்களில் 100 சதவிகிதம் இயக்குவதற்கான திட்டத்தில் இறங்கியுள்ளன.
அதன் அடிப்படையில் அனைத்து விமானங்களையும் பயன்படுத்துவதற்காக இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் தயாராகிறது. அதற்காக அவர்கள் விமான டிக்கெட் விலையில் பெருமளவு குறைத்து மாறுதல்களை தந்துள்ளனர்.
அதன்படி நாம் சொகுசு பேருந்தில் செல்வதற்காக செலவழிக்கும் கட்டனத்தை விட சில நூறுகளில் மாறு படுகிறது. பறக்கும் வேகத்தில் பேருந்தில் சென்ற மக்கள் இனி பறந்தே செல்லலாம்.