Actor Kamal Haasan films: திரைத்துறையில் ஒவ்வொரு நடிகரும் தான் வெற்றி பெற்ற படத்தின் மூலமே பேசப்பட்ட நிலையில் தனது தோல்வி படங்களால் தன்னையும் தன் படத்தையும் அதிகம் பேச வைத்தவர் உலக நாயகன் கமல். இந்திய சினிமாவிற்கு புதுமையான மற்றும் வித்தியாசமான டெக்னாலஜியை கொண்டு வந்த பெருமைக்கு சொந்தக்காரரும் இவரே.
படத்திற்கு படம் தனது திறமையான நடிப்பாலும் வேறுபட்ட கதாபாத்திரங்களாலும் இனம் காணப்படும் கமலஹாசன் சினிமாவால் தான் வளர்ந்ததாக அல்லாமல் தன்னால் சினிமா வளர வேண்டும் என்ற கர்வத்துடன் இருப்பார். கலைஞனுக்கு கர்வம் கொஞ்சம் அழகுதான்.
சங்கர் இயக்கி கமல் நடித்த இந்தியன் வெற்றி பெற்றதை அடுத்து இதன் தயாரிப்பாளர் வான்டட் ஆக நான் ஒரு படம் பண்ண வேண்டும் அது 10 இந்தியனைப் போல் பெரிய பட்ஜெட் உடன், இந்திய சினிமாவை திரும்பி பார்க்கும் படியாக இருக்க வேண்டும் என்று இயக்குனர்களிடம் அழைப்பு விடுத்தார்.
Also read: இந்தியன்-2 முதல் கங்குவா வரை.. ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இதுவரை நடந்த கொடூரமான விபத்துக்கள்
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வின் அழைப்பை ஏற்ற பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தை மட்டும் தான் எடுத்துக் கொண்டு திரைக்கதை வசனத்தை கமலிடம் ஒப்படைத்து விட்டார். கமல் இரு வேடங்களில் நடித்து 2001 இல் வெளிவந்த படம் ஆளவந்தான். படத்தின் மூலம் கலை தாகத்தை தீர்த்துக் கொண்டாரே தவிர தயாரிப்பாளரை எண்ண மறந்துவிட்டார்.
2001 காலகட்டத்தில் அதிநவீன டெக்னாலஜியான மோஷன் கண்ட்ரோல் கேமரா ஸ்பெஷல் அனிமேஷன் எபெக்ட்ஸ் என அனைத்தையும் ஆளவந்தானில் புகுத்தி படத்தை வேற லெவலில் களம் இறக்கினர்.பலரும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இப்படத்தின் கதை 1984 வந்த கமலஹாசனின் “தாயம்” நாவல் தான் என்றாலும் மக்களால் படத்தின் கதையை புரிந்து கொள்ள இயலவில்லை. சாக்லேட் வேண்டும் குழந்தைக்கு கசாயம் கொடுத்தது போல் ஆகிவிட்டது.
பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளருக்கு பட்ஜெட்டுக்கு மேல் செலவு வைத்ததோடு மட்டுமல்லாமல், ஆளவந்தான் படத்தை ரிலீஸ் செய்ய பெரிய நிறுவனங்கள் முன் வந்த போது கமல் தயாரிப்பாளர் தாணுவிடம் நீங்களே தனித்தனியாக ரிலீஸ் செய்யுங்கள் என்று வேண்டாத ஐடியா கொடுத்து தயாரிப்பாளரை தரைமட்டம் ஆக்கிவிட்டார். இதனால் கொந்தளித்த தயாரிப்பாளரும் இன்று வரை கமலுடன் முகம் கொடுத்து பேசுவதில்லை. குணாவை போல் என்ன மாயமோ அவருக்கு உண்டான காயம் ஆறிவிடும் தயாரிப்பாளருக்கு அப்படியா?
Also read: பிக்பாஸின் முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை.. கமல் வாங்கிய சம்பள பட்டியல்