செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை குறிவைக்கும் 4 படங்கள்.. உதயநிதிக்கு சவால் விட்டு பின்வாங்கிய ஹீரோ

சுதந்திர தினத்தன்று கிட்டத்தட்ட 4 தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளது. ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை வருவதால் அந்த வார இறுதி நான்கு நாட்களை குறி வைத்துள்ளனர். வரிசையாக விடுமுறை தினம் என்பதால் எப்படியும் வசூலை வாரி குவித்து விடலாம் என திட்டம் போட்டு வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க எல்லா படங்களுக்கும் அதிக எண்ணிக்கையில் தியேட்டர் கொடுப்பதில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது ரேஸிலிருந்து முக்கியமான ஹீரோ பின் வாங்கியுள்ளார்.

தங்கலான்: பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தங்கலான் படம் ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை ரிலீஸ் ஆகிறது. எப்படியும் இதற்கு அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் கொடுப்பார்கள் ரெட் ஜெயன்ட் மூவிஸ்.

டிமான்டி காலனி: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்த படமும் சுதந்திர தினம் அன்று வெளியாகிறது. இந்த படத்தின் உரிமையையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வாங்கி இருக்கிறது. தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2, படங்களுக்கும் சம நிலையில் தியேட்டர்கள் கொடுத்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கிறது உதயநிதி தரப்பு.

ரகு தாத்தா: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் காமெடி படமாக ரிலீஸ் ஆகிறது ரகு தாத்தா. பெரிய படங்களுடன் மோத உள்ள இந்த படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது சற்று சிக்கல்கள் தான். இருந்தாலும் இந்த படமும் ஆகஸ்ட் 15தில் தான் வெளியாகிறது.

உதயநிதிக்கு சவால் விட்டு பின்வாங்கிய ஹீரோ

அந்தகன்: பிரசாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்தப் படம் தங்களால் மற்றும் டிமான்டி காலனிக்கு டப் கொடுக்கும் என்று பார்த்தால் இப்பொழுது ரேசில் இருந்து விலகி உள்ளது. ஏற்கனவே 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிப்பு வந்த நிலையில், இந்த படம் முன்கூட்டியே ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று வெளியாக உள்ளது.

Advertisement Amazon Prime Banner

Trending News