திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

2023-இல் மொத்தமா மானத்தை வாங்கிய ஐந்து ஹீரோக்கள்.. நண்பனை நம்பி ஏமாந்து கண்ணீர் விட்ட உதயநிதி

Flop kollywood movies in 2023: தமிழ் சினிமா நாளுக்கு நாள் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு உச்சத்தை நெருங்கும் வேளையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவறாக புரிந்து கொண்டு வித்தியாசமாக எடுக்கிறோம் என்கிற பெயரில் மொத்தமாக சொதப்பிவிடும் தருணங்களும் அரங்கேறியது உண்டு. அவற்றில் சில.

கேப்டன்: “டெடி” வெற்றிக்கு பின் ஆர்யா மற்றும் சக்தி சௌந்தரராஜனின் கூட்டணியில்  வெளிவந்தது கேப்டன். வேற்றுகிரவாசி என இரு பயங்கரமான மிருகங்களின் கலப்பில்  உருவான ஒன்றை வைத்து பயமுறுத்த முயற்சி பண்ணி இருந்தார்கள். இதில் அந்த மிருகத்தை துரத்த அனைவரும் போராடுகிறார்கள். படத்தை வெளியிட்ட உதயநிதியோ மனசாட்சியே இல்லையா என்று ஆர்யாவை பார்த்து கதறி உள்ளார்.

கோப்ரா: விக்ரம் பல வேடங்களில் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் மூவி போன்ற எதிர்பார்ப்பை டீசரில் வெளியிட்டு, கணக்கு போட்டு தலைவலியை ஏற்படுத்தி இருந்தார்  இயக்குனர் அஜய் ஞானமுத்து. படத்தின் கூடுதலான நேரம் இதற்குப் பெரிய மைனஸ் ஆனது.

Also Read: முதல் வெற்றியை ருசிப்பதற்கு நொந்து நூடுல்ஸ் ஆன விக்ரம்.. விடாப்பிடியாக இருந்து மெருகேற்றிய பாலா

டி எஸ் பி: “சேதுபதி” படத்திற்கு பின் போலீஸ் கெட்டபில் டி எஸ் பி ஐ  காண வந்த விஜய் சேதுபதியின் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் இயக்குனர் பொன்ராம்,  பழைய கதை, நகைச்சுவை இல்லா காமெடி, சுவாரசியமற்று படத்தின் நிகழ்வுகளை ரசிகர்கள் முன்கூட்டியே  கணிக்குமாறு செய்து எதிர்பார்ப்பை குறைத்து இருந்தார் இயக்குனர்.

குலு குலு: ரத்தினகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்த குலு குலு திரைப்படத்தில் மினி கூகுள் ஆகவே வாழ முயற்சித்து இருந்தார் சந்தானம். காமெடியாக இருந்தவர்  சீரியஸாக கருத்து சொல்ல வரும்போது கேட்க ரசிகர்களுக்கு மனம் வரவில்லை. இப்படத்தின் தோல்விக்கு பின் சந்தானத்தின் அடுத்த படத்தை மிகக் குறைந்த விலைக்கு பேசினார்களாம்.

பிரின்ஸ்: டாக்டர், டான் போன்ற வெற்றி படங்களுக்கு பின் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பிரின்ஸ்சை எதிர்பார்த்த நிலையில் மோசமான திரைக்கதை, பழக்கமான காமெடி என சுவாரசியத்தை ஏற்படுத்த தவறி இருந்தார் பிரின்ஸ். இப்படத்தின் தோல்விக்கு இயக்குனர் அனுதீப்தான் காரணம் என்று பல தரப்பாலும் விமர்சிக்கப்பட்டது

Also Read: பொங்கல் ரேசில் களம் இறங்கும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உடைக்க வரும் ஹீரோ

Trending News