வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆலியா, ரியாவை தொடர்ந்து புதிய சந்தியா ஐபிஎஸ்.. ஜீ தமிழில் இருந்து இறக்கி விடப்பட்ட நடிகை

விஜய் டிவியில் பிரபல தொடரான ராஜா ராணி 2 தொடரில் இருந்து சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரியா விலகப் போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே இந்த தொடரில் முதலில் சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்தார். அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் இந்த தொடரில் இருந்து விலகினார்.

அதன் பிறகு ரியா சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆலியா இடத்தை இவர் பிடிப்பாரா என்று எதிர்பார்த்த நிலையில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இந்த தொடரின் இயக்குனர் தற்போது மற்ற படங்களின் காட்சியைக் காப்பி அடித்து இந்த தொடரை எடுத்து வருகிறார்.

Also Read : டிஆர்பி-யில் முதல் மூன்று இடத்தை பிடித்த சேனல்கள்.. விஜய் டிவி-கே தண்ணி காட்டிய பிரபல டிவி

அதனால் இணையத்தில் ராஜா ராணி 2 தொடரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தொடரில் இருந்து ரியா விலகப்போவது அந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது யார் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஜீ தமிழில் பிரபல தொடரில் இருந்து ஒரு நடிகையை விஜய் டிவி சந்தியா கதாபாத்திரத்தில் போட்டுள்ளது. அதாவது கோகுலத்தில் சீதை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த ஆஷா கௌடா தற்போது விஜய் டிவியில் இறங்கி உள்ளார். இவர்தான் இப்போது சந்தியா ஐபிஎஸ் ஆக ராஜா ராணி தொடரில் வர இருக்கிறார்.

Also Read : காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

எந்த அளவுக்கு இந்த கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுப்பார் என்பது வரும் வாரங்களில் தான் தெரிய வரும். ஆனால் கோகுலத்தில் சீதை தொடரில் சிறப்பாக நடித்திருந்ததால் இதிலும் நன்றாக நடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த சீரியலில் தொடர்ந்து கதாநாயகி மாறுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரியா வெள்ளிதிரையில் வாய்ப்பு கிடைத்ததால் இந்த தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா தொடர் கதாநாயகி ரோஷினியும் இப்படிதான் வெள்ளித்திரை செல்வதாக சீரியல் வாய்ப்பை நழுவ விட்டார். இப்போது அதே முடிவை ரியாவும் எடுத்துள்ளார்.

Also Read : இரண்டே வாரத்தில் உயிரை விட்ட சித்தப்பு.. கதறும் 4 மகள்கள், மகாநதி சீரியலில் நடந்த எதிர்பார்த்த ட்விஸ்ட்

Trending News