திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயனிடம் தூக்கியது போல பிரபல சேனலை வாங்கிய உதயநிதி.. எதையும் விட்டு வைப்பதா இல்ல!

நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது பல திரைப்படங்களை தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரையரங்குகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். இந்த வருடத்தில் மட்டுமே விஜயின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான் என கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கும் மேலாக தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக விநியோகம் செய்துள்ளார்.

அண்மையில் விக்ரம் திரைப்படத்தின் விநியோகஸ்தராக கிட்டத்தட்ட 500 கோடி வரை வசூலை ஈட்டிய நிலையில், அதன்பின் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 100 கோடி வரை வசூலித்தது.இதனிடையே தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களை திரையரங்கிற்கு விநியோகம் செய்ய உதயநிதி ஸ்டாலின் களமிறங்கி உள்ளார்.

Also Read: இந்தியன் 2 படத்திற்கு வந்த பெரும் சிக்கல்.. கை கொடுத்து காப்பாற்றிய உதயநிதி ஸ்டாலின்

அதுமட்டுமில்லாமல், அண்மையில் 25 கோடி கொடுத்து சிவகார்த்த்திகேயனின் யூடியூப் சேனலை உதயநிதி ஸ்டாலின் வாங்கி நடத்தி வருகிறார். இதனிடையே கொரோனா காலகட்டத்திற்குப் பின் யூடியூப் சேனல்கள் அதிகரித்த நிலையில், அதற்கு முன்பாகவே பொதுமக்களிடம் பிராங்க் செய்து வீடியோஸ் போடுவது, ஷார்ட் பிலிம் எடுத்து அப்லோட் செய்வது என தங்களது யூடியூப் சேனலில் 4 மில்லியனுக்கும் மேலாக சப்ஸ்கிரைபர்சை கொண்டுள்ள சேனல் தான் ப்ளாக் ஷீப்.

இதனிடையே இந்த சேனலின் வளர்ச்சிக்காக அடுத்தபடியாக சாட்டிலைட் சேனல் அறிமுகப்படுத்த போவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் வடிவேலுவை வைத்து விளம்பரப்படுத்தினர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின், தற்போது பிளாக் ஷீப் தொடங்கியுள்ள சாட்டிலைட் சேனலை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: பாடாய்படுத்தும் வெற்றி இயக்குனர்.. முடியல! நடிப்புக்கு முழுக்கு போடும் உதயநிதி ஸ்டாலின்

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமாக கலைஞர் தொலைக்காட்சி உள்ள நிலையில், கலைஞர் டிவிக்கு படங்களை வாங்குவதைப் போல இந்த சேனலுக்கும் சாட்டிலைட் உரிமையை வாங்கி சேனலை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சேனலை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும்,கலைஞர் தொலைக்காட்சியில் வேலை செய்த சில தொகுப்பாளர்கள் ப்ளாக் ஷிப் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி கோடி கணக்கில் செலவு செய்து பல சேனல்களை ஆரம்பிப்பார் எனவும் பேசப்பட்டு வருகிறது.

Also Read: மொத்தமாக முடிவு கட்டப் போகும் உதயநிதி ஸ்டாலின்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க

Trending News