வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எதிர்பாராத கூட்டணியில் ஏகே 62.. விக்னேஷ் சிவனை தொடர்ந்து மகிழ்திருமேனிக்கும் போட்ட பட்ட நாமம்

ஏகே 62 படத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. முதலில் லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அஜித்துக்கு விக்னேஷ் சிவன் கதையில் உடன்பாடு இருந்தும் லைக்கா இவரின் கதையை நிராகரித்து விட்டது.

மேலும் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை தூக்கி விட்டு அவருக்கு பதிலாக மகிழ்திருமேனியை லாக் செய்தனர். ஆனால் இதற்கான அறிவிப்பும் தற்போது வரை வந்த பாடு இல்லை. மேலும் வருகின்ற மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Also Read : பிள்ளையார் சுழி போடாத நிலையில் எண்ட் கார்டு போட்ட ஏகே 62.. அஜித்திற்கு கொடுத்த நெருக்கடி

லைக்கா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே 62 கூட்டணி அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது ஏகே 62 படம் இப்போது பெரிய இடத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளது. இப்போது அஜித் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

ஆகையால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகும். ஆகையால் மகிழ்திருமேனிக்கு பதிலாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். ஏனென்றால் இப்போது சூர்யாவின் கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரவுள்ளது.

Also Read : விஜய்யை பின்னுக்கு தள்ளிய கடைசி 3 படங்கள்.. வினோத்தால் எகிறிய அஜித்தின் மார்க்கெட்

எனவே அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருக்கும் சிறுத்தை சிவா மீண்டும் அவருடன் கூட்டணி போட இருக்கிறார். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. விக்னேஷ் சிவனை தொடர்ந்து இப்போது மகிழ் திருமேனிக்கும் அஜித் பட்டை நாமம் போட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்த இரண்டு மாதத்திற்குள் மகிழ்திருமேனி வேற படத்தை தொடங்க உள்ளாராம். ஆகையால் அஜித்தின் 63 அல்லது 64ஆவது படத்தில் மகிழ்திருமேனி, லைக்கா கூட்டணி இணையும் என அஜித் தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே தெரிய வரும்.

Also Read : அஜித்துக்கு சிபாரிசு செய்த விவேக்.. லைஃப் டைம் படமாக ஏகே  கொடுத்த பிளாக்பஸ்டர் 

Trending News