திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மணிரத்னத்திற்கு கோடிகள் தான் முக்கியம், தெருக்கோடிகளை பார்க்க மாட்டார்.. கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர்கள்

மணிரத்னம் பல முன்னணி பிரபலங்களை வைத்து கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்தார். இந்த படத்தை லைக்கா உடன் இணைந்து மணிரத்தினம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சேர்த்து 500 கோடி பட்ஜெட்டில் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி நல்ல வசூல் வேட்டையாடி உள்ளது. இந்தப் படத்தில் பெரிய அளவு லாபம் கிடைத்ததால் இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களை தற்போது மணிரத்தினம் செய்து வருகிறார். மேலும் பொன்னியின் செல்வன் 2 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.

Also Read : பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிரத்னம்.. அடுத்த வசூல் வேட்டை ஆரம்பம்

இந்நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு பேட்டியில் மணிரத்தினத்தை பற்றி கூறியுள்ளார். அதாவது தமிழ் மொழியில் படம் எடுப்பவர்கள் ஆந்திரா, பாம்பே போன்று வெளி இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு செய்கிறார்கள். அங்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் உள்ள சினிமா தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தால் வெளி மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான பேர் சம்பாதித்தார்கள். மணிரத்தினம் இப்படத்திற்காக செலவு செய்த எல்லாமே ஆந்திர அரசாங்கத்திற்கு தான் சென்றது.

Also Read : 4 வருடமா கிடப்பில் போட்ட மெகா பட்ஜெட் படம், தூசி தட்டிய சுந்தர் சி.. மணிரத்னம் பற்ற வைத்த நெருப்பு

இதனால் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட லாபம் கிடையாது. இங்கு உள்ள தொழிலாளர்கள் பசி, பட்டினி என்று அவதிப்படுகிறார்கள். ஆனால் படத்தின் வசூல் மட்டும் தமிழ்நாட்டில் தான் வரணுமா, தமிழ் மக்கள் கொட்டி கொடுக்கணும் என கே ராஜன் கொந்தளித்துள்ளார். எதைப் பற்றியும் மணிரத்தினம் கண்டுகொள்ள மாட்டார்.

ஏனென்றால் அவருக்கு எத்தனை கோடிகள் வந்தது என்பதுதான் முக்கியம், தெருக் கோடிகளைப் பற்றி கவலைப்பட மாட்டார் என்று தயாரிப்பாளர் கே ராஜன் மணிரத்தினத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read : சத்தமே இல்லாமல் மணிரத்னம் செய்த தில்லாலங்கடி வேலை.. பொன்னியின் செல்வனில் காக்கப்பட்ட சீக்ரெட்ஸ்

Trending News