வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஸ்டாரை வைத்து கல்லா கட்ட பாக்குறீங்களா ஆர்யா? ஓப்பனாக பதிலடி கொடுத்த காதர் பாட்சா

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படத்தின் கதாநாயகன் ஆன ஆர்யாவிற்கு அப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று மாபெரும் ஹிட் தந்தது. இதை தொடர்ந்து காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் ரஜினியை வைத்து ஆர்யா கல்லா கட்ட பார்க்கிறார் என்ற சர்ச்சை எழுந்ததுள்ளது .

இந்நிலையில் சார்பட்டா படத்திற்கு அடுத்து 2022 இவரின் தயாரிப்பில் வெளிவந்த கேப்டன் படம் போதிய வெற்றியை தரவில்லை. அவ்வாறு தோல்வி முகம் காட்டிய நிலையில இவர் தற்பொழுது தன் படத்தின் பப்ளிசிட்டிக்காக ரஜினியை பயன்படுத்திக் கொண்டது வேதனையை அளிக்கிறது.

Also Read: ரஜினியை மிரள விட்ட வடிவுக்கரசியின் நிஜ வாழ்க்கை.. சொல்ல முடியாத மன வேதனையில் இருக்கும் வில்லி

முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இட்னானி, பிரபு ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதனின் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும் இப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இப்படத்தில் கிராமத்தை கைவசப்படுத்த நினைக்கும் நபரிடம் இருந்தது காதர் பாட்சா அமைதியை கொண்டு வரும் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்திருக்கிறார். காதர் பாட்சா என்னும் இந்த பெயர் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: 40 வருடமாகியும் வித்தியாவை மறக்காத தளபதி விஜய் .. பாசத்தால் நெகிழ வைத்த சம்பவம்

பாட்சா என்றாலே நம் நினைவுக்கு வருவது ரஜினி மட்டும் தான். அவ்வாறு இருக்கையில் இந்த பெயரை ஏன் இப்படத்தில் வைக்கப்பட்டது என்பது கேள்வியாக கேட்கப்பட்டு வருகிறது. இதை குறித்து பேசிய ஆர்யா, பல நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையே ரஜினி பெயரை குட் வைப்ஸ்காக வைத்ததாக விளக்கம் அளித்தார்.

இது ஒரு பக்கம் இருக்க படகுழு சூப்பர் ஸ்டாரை வைத்து கல்லா கட்ட நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. ஆனால் ஒரு பப்ளிசிட்டி ஆக இருக்கும் என்ற நோக்கத்தோடு தான் இவை இடம் பெற்றது என்பதை ஆர்யா இன்டர்வியூ ஒன்றில் கூறி விளக்கம் அளித்து வருகிறார். இது போன்ற சம்பவம் செய்தது தப்பு எனில் அதை தெளிவுபட விளக்கம் வேற அளிப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

Also Read: அதிரடி, காதல் என வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன்.. படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண் யார்?

Trending News