Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவை எந்த அளவுக்கு அசிங்கப்படுத்தி அவமானப்படுத்த முடியுமோ அதை மட்டமாக காட்டப்பட்டு வருகிறது. அதாவது மீனா பேசிய பேச்சுக்கு கடுப்பான சத்யாவின் நண்பரான லோக்கல் ரவுடி முத்துவை பழிவாங்கி விட்டார்.
எந்தத் தவறுமே பண்ணாமல் முத்து தண்டனை அனுபவிப்பதை பார்க்கும் பொழுது தான் கடுப்பாகிறது. அதாவது ஒயின்ஷாப்புக்கு போயி குடிக்காமல் வந்த உத்தமருக்கு கிடைத்த அவமரியாதை என்றே சொல்லலாம். ஆனால் அந்த லோக்கல் ரவுடி சித்தரித்த வீடியோ அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியானதால் அப்பட்டமாக முத்து ஒரு குடிகாரர் என்ற முத்திரை குத்தப்பட்டு விட்டது.
இது எதுவும் தெரியாத முத்து சவாரி எடுத்துட்டு வரும்பொழுது அதில் இருந்த நபருக்கும் வீடியோ மூலம் முத்து குடித்து இருக்கிறார் ரவுடி என்று நினைத்து விட்டார். அதனால் பாதிலேயே இறங்கி அவர்கள் போய்விட்டார்கள். அத்துடன் ஸ்ருதியின் அப்பா, அவருடைய பவரை பயன்படுத்தி டிராபிக் போலீஸ்- க்கு போன் பண்ணி முத்துவை பற்றி தவறாக சொல்லிவிட்டார்.
முத்துவிற்கு கிடைத்த அம்மா பாசம்
அந்த நேரத்தில் அங்கே வந்த முத்துவை அந்த போலீசார் அடிக்க கை ஓங்கி காரை அபகரித்து விட்டார். ஆனால் முத்து இது என்னுடைய மனைவி எனக்கு ஆசை ஆசையாக வாங்கி கொடுத்த காரு தயவு செய்து கொடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார். ஆனால் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் காரை அவர்கள் கொண்டு போய் விட்டார்கள்.
இப்படி என்ன பண்ணனும் என்று தெரியாத குழப்பத்தில் அடுத்தடுத்து ஒவ்வொரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும்படி அமைந்துவிட்டது. பிறகு இப்படியே வீட்டிற்கு முத்து போகிறார். இதற்கிடையில் மீனா அவருடைய அம்மா வீட்டில் இருக்கும் பொழுது சத்யா மூலம் வீடியோவை பார்த்து அதிர்ச்சியாகி வீட்டிற்கு கிளம்பி விட்டார்.
அதே மாதிரி ரோகினி மற்றும் மனோஜ் இந்த வீடியோவை குடும்பத்தில் இருப்பவர்களையும் பார்க்க வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்கள். அந்த வகையில் மனோஜ் பார்க்கில் உட்கார்ந்து எப்படி நேரத்தை செலவழித்தார் என்ற விஷயத்தை வீடியோ மூலம் முத்து தெரிவித்தாரோ, அதே மாதிரி மனோஜும் அனைவரது முன்னிலையிலும் வீடியோவாக காட்டி விடுகிறார்.
இதை பார்த்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் அண்ணாமலை முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயாவிற்கும் போன் பண்ணி இதைப்பற்றி கேட்டு அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். இதனால் மொத்த குடும்பமும் கோபத்தில் இருக்கும் பொழுது வீட்டிற்குள் நுழைந்த முத்துவை மனோஜ் சீண்டி பார்க்கிறார்.
வழக்கம்போல் முத்து கோவப்பட்டு மனோஜை அடிக்கப் போகும் பொழுது அண்ணாமலை முத்துவை அடித்து விடுகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். ஆனால் இந்த நேரத்தில் முத்துவுக்கு சப்போர்ட்டாக ஆறுதலாக இருந்து பாசத்துடன் பேசப்போவது விஜயாவாகத் தான் இருக்க போகிறது.
ஆக மொத்தத்தில் இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் முத்துவிற்கு ஒரு நல்லது நடக்கப்போகிறது என்றால் அம்மாவின் பாசம் கிடைக்கப் போகிறது. இதை எதிர்பார்க்காத ரோகிணி மறுபடியும் முத்துவிடம் தோற்றுப் போய் நிற்கப் போகிறார்.