இப்போதெல்லாம் பல தமிழ் படங்கள் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்படி இல்லையெனில் ஒரு பாடலுக்கு டூயட் பாடவாவது வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார்கள். உண்மையாகவே படத்திற்கு அந்த வெளிநாட்டு காட்சிகள் தேவையா அல்லது படப்பிடிப்பை சாக்காக வைத்து ஊர் சுற்றி பார்க்கிறார்களா என்று தெரியவில்லை.
சரி அதெல்லாம் இருக்கட்டும் தமிழ் சினிமாவில் வெளிநாடுகளில் சென்று படப்பிடிப்பு நடத்தும் கலாச்சாரம் எப்போது தோன்றியது என்று தெரியுமா? முதன் முதலில் எந்த தமிழ் படத்தை வெளிநாட்டில் சென்று படமாக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த தகவலை தான் நாம் இதில் பார்க்க போகிறோம்.
அதன்படி இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான சிவந்த மண் என்ற தமிழ் படம் தான் முதன் முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டதாம். இந்த படத்தில் சில காட்சிகளுக்காக யூரோப், ஈபிள் டவர் மற்றும் ஆல்ப்ஸ் மெளண்டன் ஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
இந்த படம் கிட்டத்தட்ட 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இந்த படம் வெளியான பின்னர் தான் அனைத்து இயக்குனர் மற்றும் ஹீரோக்களுக்கு தாங்களும் வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற ஆசை வந்ததாம்.
அதன் பின்னரே நடிகர் திலகம் எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக பல இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள். தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
சமீபத்தில் வெளியான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் டிரைலரில் கூட பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டிருப்பார்கள். சினிமாவின் உச்சத்தை தொட்ட சிவாஜி இதுபோன்ற சாதனைகளை படைத்துள்ளது தமிழ் சினிமாவுக்கு பெருமை தான்.