ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஏக்கர் கணக்கில் வாரி கொடுத்த எம்ஜிஆர்.. இவர்கள்தான் இப்போது தமிழகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்

Former chief minister MGR gave land for celebrities: “எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று எதிரியாலேயே மனதார புகழப்பட்டவர்” எம்ஜிஆர். கொடையில் கலியுகத்து கர்ணனாக வாழ்ந்த எம் ஜி ஆர் அவர்கள் பிறர் கேட்காமலேயே அவர்கள் அதிர்ச்சியாகும் வண்ணம் கொடுப்பதில் கைதேந்தவர்.

எம்ஜிஆரால் வாழ்ந்தவர் பலர் வீழ்ந்தவர் சிலர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் எம் ஜி ஆர் உடையது தனது இறுதி காலங்களில் தன்னால் முடிந்த அளவு தன்னை நம்பி இருந்த விசுவாசிகளுக்கு அவர்கள் கனவிலும் நினைக்காத அளவு உதவிகளை வாரி வழங்கி சென்றார் எம் ஜி ஆர். எம்ஜிஆர் கொடுத்த நிலங்களை வைத்து பெரிய ஆள் ஆனவர்கள்  இப்பொழுது மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்.

அம்பிகா மற்றும் ராதா:  எம்ஜிஆரின் நம்பிக்கை கூறிய மற்றும் விருப்பமான நடிகைகளாக இருந்த அம்பிகா மற்றும் ராதா அவர்களுக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள 25 ஏக்கருக்கும் மேலாக உள்ள நிலத்தை பரிசாக கொடுத்தார் எம்ஜிஆர். இதை 1983 இல் ஏஆர்எஸ் கார்டன் என்ற ஸ்டுடியோவாக மாற்றி எம்ஜிஆர் முன்னிலையில் துவக்கி வைக்கவும் செய்தனர் இச்சகோதிரிகள் இதன் மதிப்பு இன்றைய நிலையில் பல நூறு கோடி களுக்கும் மேல்.

Also read: ரஜினி, எம்ஜிஆர் மீது எதிர்ப்பை காட்ட பழிவாங்கப்பட்ட 2 படங்கள்.. இரண்டு தலைகள் செய்த உச்சகட்ட அராஜகம்

ஜேப்பியார்: எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த ஜேப்பியார் சென்னையின் பிரதான சாலையில் உள்ள ஒரு நிலத்தை காண்பித்து உங்களுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று எம்ஜிஆரிடம் நிலம் கேட்க, “எனக்காக வேண்டாம். மக்களுக்காக கல்வி நிறுவனங்கள் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் கட்டிக் கொள். உனக்கு தேவையான அனைத்து அரசாங்க உதவிகளையும் செய்கிறேன்” என்று நிலங்களை வாரி வழங்கினார். இன்று அவை சத்யபாமா பல்கலைக்கழகமாகவும் பல பொறியியல் கல்லூரிகளாகவும்  உருவெடுத்து உள்ளன. விசுவாசம் என்ற  ஒற்றை சொல்லுக்காக, வாழ்க்கையின் கடைக்கோடியில் இருந்தவரை தமிழகமே திரும்பிப் பார்க்க வைத்தார் எம்ஜிஆர். “எம்ஜிஆரை பார்த்த பிறகு தான் வாழ்க்கையில் உச்சத்தை அடைந்தேன்” என்று ஜேப்பியாரே பல பேட்டிகளில் சொன்னார்.

ஏசிசண்முகம்:  எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஏசி சண்முகம் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர் ஆவார். இன்று மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன இவருக்கு ஆரம்ப காலங்களில் எம்ஜிஆர். கல்வி வளர்சிக்காக கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்காக பல நிலங்களை வாரி வழங்கி உள்ளார்.

ராமசாமி உடையார்: ஆரம்பம் காலங்களில் எம்ஜிஆர் உடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த  ராமசாமி உடையாரை பல வழிகளிலும் காப்பாற்றி உள்ளார் எம்ஜிஆர் மேலும் ராமசாமி உடையார் ஆக்கிரமித்து சர்ச்சையில் இருந்த நிலங்களை கல்வி அறக்கட்டளைக்காக வழங்கினார் எம்ஜிஆர். இன்று ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் என பல கல்வி நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார் ராமசாமி உடையார்.

அப்பல்லோ ரெட்டி: எம்ஜிஆர் உடல்நிலை குறைவின் காரணமாக அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி குணப்படுத்தியதில் பெரும்பங்கு அப்பல்லோ  நிறுவன பிரதாப் ரெட்டி உடையது. இந்த நன்றி கடனை தீர்க்கும் வகையில்  சிகிச்சைக்கு பின் திரும்பிய எம்ஜிஆர் அவர்கள் பிரதாப் ரெட்டியின் அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு பல சலுகைகளை செய்து உள்ளார்.

Also read:  எம்ஜிஆர் கழுத்திலிருந்த குண்டு நீக்கப்பட்டதா இல்லையா?. பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த செல்ஃபி சிவக்குமார்

Trending News