செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட்.. உண்மையை சொன்ன முன்னாள் டைட்டில் வின்னர்!

Bigg Boss: விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். ஏழு சீசன்களை வெற்றிகரமாக முடித்து எட்டாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. மற்ற எந்த சீசன்களிலும் நடக்காத அளவுக்கு இந்த சீசனில் ஆண்கள் ஒரு அணி பெண்கள் ஒரு அணி என பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கமல் நிகழ்ச்சியை விட்டு போனது, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி உள்ளே வந்தது, இந்த புதுவித ஆட்டம் எல்லாம் சேர்ந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யம் குறைந்ததாக ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட்

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டட் என்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் முன்னாள் டைட்டில் வின்னர். இந்த நிகழ்ச்சியில் நடக்கும் ஒரு சில சம்பவங்களை பார்க்கும் பொழுது இது இயல்பாக நடப்பது போல் இல்லை என எல்லோருக்குமே சந்தேகம் இருக்கும்.

ஆனால் உள்ளே போய்விட்டு வந்தவர்கள் அத்தனை பேரும் அப்படி எல்லாம் கிடையாது இது அந்தந்த நேரத்தை உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்று சொல்வதுண்டு. ஆனால் முதன்முறையாக போட்டியாளர் ஒருவர் இதை ஸ்கிரிப்ட் என சொல்லி இருக்கிறார்.

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக ஆனவர் தான் ரித்விகா. இவர் மெட்ராஸ், கபாலி, பரதேசி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த சீசனை பொருத்தவரைக்கும் ஐஸ்வர்யா தத்தா பெரிய அளவில் ரீச் ஆனார் என்று தான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் பிக் பாஸ் 8 பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு பதில் சொன்ன ரித்விகா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எட்டு வருடம் காத்திருந்தேன், 10 வருடம் காத்திருந்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

எனக்கு ஒரு போன் கால் தான் வந்தது நான் உடனே ஓகே சொல்லி கலந்து கொண்டேன். அதுவே இப்போது போன் வந்திருந்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து இருப்பேனா என்பது பெரிய சந்தேகம்தான். எனக்கு என்னவோ இந்த எட்டாவது சீசன் ஸ்கிரிப்ட் போல் இருக்கிறது என சொல்லி இருக்கிறார்.

Trending News