சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எம்ஜிஆர் ஐ பகைத்த 4 நடிகர்கள்.. சூப்பர் ஸ்டாரின் சர்ச்சையான போஸ்டரை கிழித்து தொங்க விட்ட விசுவாசிகள்

Former tamilnadu CM MGR hated and warned 4 tamil Actors: இன்றைய தலைமுறையில் கிளாசிக் நடிகர்கள் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது எம்ஜிஆர் மற்றும் சிவாஜி தான். தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக கொடி கட்டி பறந்த ஏழைப்பங்காளன் எம்ஜிஆர் தன்னுடைய கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் பொருந்தாதவர்களை சற்றே விலக்கி வைத்து தன் முன்னேற்றத்திற்கான காய்களை நகர்த்துவதில் கெட்டிக்காரர்.

ஜெய்சங்கர்: தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் எம்ஜிஆர் உடன் ஒரு தாய் மக்கள் என்ற படத்தில் நடிக்க இருந்தது. படம் தொடங்குவதற்கான காலதாமதத்தால் அதிலிருந்து விலகி எம்ஜிஆர் உடன் சிறு விரிசலை ஏற்படுத்திய அவர் திமுகவில் இணைந்து பகையை சம்பாதித்து கொண்டார்.

ரவிச்சந்திரன்: சின்ன எம்ஜிஆர் என்று திரையுலகில் பட்ட பெயருடன் அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அவர்கள் தீராத குடிப்பழக்கத்தின் காரணமாக ஒரு முறை பட சூட்டிங் போது ஸ்டைலாக அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தாராம். எம்ஜிஆர் அவரை கடக்க, கண்டு கொள்ளாமல்  அவமானப்படுத்தியது மற்றும் ஜெயலலிதா உடனான நடிப்பு போன்றவை எம்ஜிஆருக்கு பிடிக்காமல் போனது.

Also read: 50 வருடமா சினிமாவிற்காக ஓடிக்கொண்டிருக்கும் 5 நடிகர்கள்.. கொல செய்ய நினைத்தவரையே கொண்டாடிய கமல்

கமல்ஹாசன்: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கமல்ஹாசன் “நாளை நமதே” படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்தில் நடிக்க முடியவில்லை என்று வருந்தியுள்ளாராம். எம்ஜிஆர் மற்றும் கமலின் தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் வெளிப்படுத்திய கமலை கண்டிக்கவும் செய்தாராம் எம்.ஜி.ஆர்.

ரஜினிகாந்த்: எம்ஜிஆர் ஒருமுறை தியேட்டர் திறப்பு விழாவிற்கு சென்றபோது வழியில் ரஜினி கையில் புகையும் மதுபாட்டிலும் வைத்திருக்கும் ரங்கா படத்தின் போஸ்டர்  வரிசையாக ஒட்டப்பட்டு இருந்தது.  இதனால் எரிச்சல் அடைந்த எம்ஜிஆர் இன்றைய தலைமுறையினர் சினிமா பிரபலங்கள் மூலம் கெட்டுப் போய் வருகின்றனர் என்று கோபத்தில் கொந்தளித்தாராம்.

பட விழா முடிவதற்குள் ரஜினியின் போஸ்டர் எம்ஜிஆரின் ஆதரவாளர்களால் கிழித்து போடப்பட்டது. எம்ஜிஆர் எச்சரித்த பின்பும் சூப்பர் ஸ்டார் அவர்கள் தனது சர்ச்சைக்குரிய பழக்கத்தை திரையில் தொடர்ந்தது எம்ஜிஆரை மேலும் வெறுப்பேற்றியது.

Also read: 40 வருட ராஜதந்திரத்தை பயன்படுத்தும் கமல்.. இயக்குனரை பகடைகாயாக யூஸ் பண்ணும் ரங்கராய நாயக்கர்

Trending News