திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சூப்பர் ஸ்டார் பெயர தூக்க போட்டி போட நினைக்கும் நாலு பேரு இவர்கள் தான்.. ஹுக்கும் பாடலால் வெடிக்கும் சர்ச்சை

Actor Rajini: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ஜெயிலர். இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இந்த பாட்டிற்கு ரசிகர்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது.

ஹுக்கும் என்று ஆரம்பிக்கும் இப்பாடல் ரஜினி ரசிகர்களை திக்கு முக்காட செய்தது. ஆனால் படத்தில் இடம்பெறும் சில வரிகள் மறைமுகமாக சில நடிகர்களை தாக்கும்படியாக அமைந்தது. குறிப்பாக சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இப்போது உள்ள நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

Also Read : ஒரே நாளில் ரிலீஸாகி வெள்ளிவிழா கண்ட 3 படங்கள்.. ரஜினி, கமலை பீதி அடைய வைத்த நாயகன்

இதை வெளிக் கொண்டு வரும் விதமாக பெயர தூக்க நாலு பேரு என்ற பாடல் வரி இடம் பெற்றிருந்தது. அந்த நாலு பேரு யாரு என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் இவர்கள்தான் அந்த நாலு நடிகர்கள் என ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது கமெண்டர் என்று தளபதி விஜய்யை முதல் ஆளாக குறிப்பிட்டு இருக்கிறார். ஏனென்றால் வாரிசு பட விழாவில் கூட பல நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று புகழ்ந்து தள்ளி இருந்தனர். அதற்கு விஜய்யும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்ததால் அவருக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் மீது ஆசை உள்ளது என பலரும் கூறி வந்தனர்.

Also Read : பணத் திமிரில் கணவர்களை விவாகரத்து செய்த 6 பிரபலங்கள்.. காதல் கணவரை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அடுத்ததாக பிரின்ஸ் என்று சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு இருக்கிறார். ஏனென்றால் ரஜினியை ரோல் மாடலாக வைத்து சிவகார்த்திகேயன் நிறைய விஷயங்களை செய்து வருகிறார். அதுவும் ரஜினியின் பழைய படத்தின் டைட்டிலை தான் தனது படங்களுக்கு இப்போது சிவகார்த்திகேயன் வைத்து வருவதால் அவருக்கும் சூப்பர் ஸ்டார் வேண்டும் என்ற ஆசை உள்ளது.

மூன்றாவதாக தொட்டி ஜெயா என்று சிம்புவை குறிப்பிட்டு இருக்கிறார். சிம்புவும் ரஜினியின் இடத்தை பிடிக்க தற்போது போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக ரஜினியின் மாப்பிள்ளை தனுஷை கேப்டன் மில்லர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவ்வாறு விஜய் சிவகார்த்திகேயன், சிம்பு மற்றும் தனுஷ் தான் அடுத்த சூப்பர் ஸ்டாருகாக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்.. சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை

- Advertisement -

Trending News