ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

May 17 Theater Release Movies: மே-17 தியேட்டரில் ரிலீஸாகும் 4 படங்கள்.. கிங்கு சந்தானத்திற்கு போட்டியாக வரும் ஹீரோ

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கவினின் ஸ்டார் மற்றும் அர்ஜுன் தாசின் ரசவாதி படங்கள் வெளியாகி இருந்தது. இந்த இரு படங்களுமே ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முந்தைய வாரம் வெளியான அரண்மனை 4 படம் எப்போதும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வருகின்ற மே 17 வெள்ளிக்கிழமை அன்று கிட்டத்தட்ட நான்கு படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. தலைமைச் செயலகம் என்ற படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. யாஷிகா ஆனந்த் மற்றும் பிரஜன்ட் நடிப்பில் உருவாகி இருக்கும் படிக்காத பக்கங்கள் படம் மே 17 வெளியாகிறது.

மணிமாறன் மற்றும் அஸ்வினி சந்திரசேகர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னி படமும் இதே நாளில் வெளியாகிறது. இந்நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு. 90ஸ் கிட்ஸ் ஆக இருக்கும் சந்தானம் திருமணத்தை செய்ய பெண் தேடி அல்லோப்படுகிறார்.

மே 17 தியேட்டரில் வெளியாகும் நான்கு படங்கள்

ஆனால் திருமணம் முடித்த பின்பு என்னென்ன பிரச்சனையை சந்திக்கிறார் என்பதை கலகலப்பாக இங்க நான் தான் கிங்கு படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் சந்தானத்திற்கு போட்டியாக விஜயகுமார் இறங்குகிறார். உரியடி படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர்தான் விஜயகுமார்.

இவர் எலக்சன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தேர்தல் மற்றும் வாக்கு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் சமயத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பே எலக்சன் படம் வெளியாவது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சந்தானத்திற்கு விஜயகுமார் டஃப் கொடுப்பாரா இல்லை, ரேஸில் இருந்த பின்வாங்குவாரா என்பது படம் வெளியானால் தெரியவரும்.

Trending News