புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அப்பா வயசுனு ரஜினியோடு 4 படங்களில் ஜோடி போட மறுத்த ஐஸ்வர்யா ராய்.. மாமனார் வரை சென்ற பஞ்சாயத்து

Rajini – Aishwarya Rai : உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் சில படங்களில் நடித்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு டாப் ஹீரோக்களோடு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் ரஜினியுடன் நான்கு படங்களில் வாய்ப்பு வந்த நிலையில் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஏனென்றால் இவர்களுக்குள் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் ஐஸ்வர்யா ராய் ரிஜெக்ட் செய்துவிட்டார்.

அதாவது முதலில் படையப்பா படத்தில் தான் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சௌந்தர்யா நடித்திருந்தனர். இதில் ஐஸ்வர்யா ராய்க்கு வாய்ப்பு வந்த போது அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன்பிறகு மனிஷா கொய்ராலா ரஜினியுடன் இணைந்து பாபா படத்தில் நடித்திருந்தார்.

அப்போதும் முதலில் ஐஸ்வர்யா ராயை தேடி தான் இந்த வாய்ப்பு வந்திருக்கிறது. அதேபோல் அடுத்ததாக சந்திரமுகி, சிவாஜி போன்ற படங்களிலும் இவருக்கு சான்ஸ் கிடைத்தபோது ரஜினியுடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Also Read : பிளான் பண்ணாம களத்தில் இறங்கி தோற்றுப் போன ரஜினி படம்.. வெற்றி இயக்குனரையே சாய்த்த நடிகையின் ராசி

அதன் பிறகு தான் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பார். இதற்கு காரணம் அவரது மாமனார் அமிதாபச்சனிடம் படக்குழு சிபாரிசுக்கு சென்றது. அதன் பிறகு ஐஸ்வர்யா ராய் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தார்.

அதோடு ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படமாக அந்த படம் அமைந்தது. எந்திரன் 2.0 இரண்டாம் பாகத்தில் அக்ஷய்குமார் நடித்த நிலையில் அதில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

Also Read : ரஜினியின் கொஞ்சம் நெஞ்ச நிம்மதியையும் கெடுத்து விட்டு ஐஸ்வர்யா.. அஜித் வரை சென்ற பஞ்சாயத்து

Trending News