சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து வேட்டையாட தயாரான லோகேஷ்.. அடுத்தடுத்த தரமான 4 படங்கள்

சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது ஒரு சாதாரண விஷயம்தான். தற்போது மாஸ் ஹீரோக்களாக உள்ள ரஜினி, கமல், அஜித், விஜய் என எல்லோருமே தோல்வியை சந்தித்ததுதான் இந்த நிலைக்கு வந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வரை வெற்றியை மட்டுமே கண்டுள்ளார்.

லோக்கேஷின் முதல் படமான மாநகரம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத்தொடர்ந்து கைதி, மாஸ்டர் என பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அசத்தினார். தற்போது உலக நாயகனை வைத்த லோகேஷ் இயக்கிய விக்ரம் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அதே வெற்றி வரிசையில் லோகேஷ் நான்கு படங்களை இயக்கயுள்ளார்.

தளபதி 67 : விஜய், லோகேஷ் கூட்டணி உருவான மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்நிலையில் மீண்டும் விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும். மேலும் இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் சாயலில் உருவாக உள்ளது.

கைதி 2 : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் கைதி. தற்போது வெளியாகியிருக்கும் விக்ரம் படத்திலேயே கைதி படத்தின் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரத்தை லோகேஷ் பயன்படுத்தியிருந்தார். மேலும் கார்த்தியின் குரல் மட்டும் விக்ரம் படத்தில் ஒலித்தது. இந்நிலையில் விரைவில் கைதி 2 படத்திற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரும்புக்கை மாயாவி : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இரும்பு கை மாயாவி உருவாக உள்ளதாக சென்ற ஆண்டு அறிவிப்புகள் வெளியானது. லோகேஷ் இப்படத்தை இயக்க சிறிது கால அவகாசம் கேட்டதால் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் மீண்டும் இப்படத்தையும் லோகேஷ் தொடங்க வாய்ப்பு உள்ளது. எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்.

விக்ரம் 3 : கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாவது உறுதியாகியுள்ளது. விக்ரம் படத்தில் ஐந்து நிமிடம் மட்டுமே நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் இருந்த நிலையில் அடுத்த பாகத்தில் அதிக காட்சிகளில் சூர்யா இடம் பெறுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Trending News